ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நீச்சல் வீராங்கனை ஷெய்னா ஜாக். இவர் 2017ஆம் ஆண்டு நடந்த உலக நீச்சல் சாம்பியன்ஷிப் தொடரின் ரிளே நீச்சல் போட்டியில் நான்கு முறை பதக்கம் வென்றார்.
இதனைத்தொடர்ந்து 2019ஆம் ஆண்டு நடந்த நீச்சல் தொடரின் போது இவரது பரிசோதனையில் ஊக்கமருந்து பயன்படுத்தியது நிரூபனமானது. இதனால் இவரை ஆஸி. அணியிலிருந்து நீக்கப்பட்டு, ஜப்பானில் உள்ள பயிற்சி மையத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டார். இதனிடையே இவருக்கு ஆஸ்திரேலிய விளையாட்டு தீர்ப்பாயம் சார்பாக நான்கு ஆண்டுகள் தடை விதிக்க பரிந்துரை செய்ப்பட்டது.
இந்த விசாரணை சர்வதேச விளையாட்டு நடுவர் நீதிமன்றத்தில் முறையீடு நடத்தப்பட்டது. இதன் விசாரணை முடிவடைந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்தத் தீர்ப்பில், '' ஷெய்னா ஜாக் வேண்டுமென்றே லிகண்ட்ரால் என்னும் ஊக்கமருந்தை பயன்படுத்தவில்லை. அதனால் அவருக்கு இரண்டு ஆண்டுகள் தடை விதிக்கப்படுகிறது'' என்றார்.
இவரது தடையை எதிர்த்து மேல்முறையீடு செய்யலாம் எனவும் நீதிமன்றம் கூறியுள்ளது. இதனால் இவரின் மேல்முறையீடு முடிவு குறித்து சிலகாலம் காத்திருக்க வேண்டும்.
இவரது தடைக்காலம் அடுத்த ஆண்டு ஜூலை மாதம் 11ஆம் தேதியுடன் முடிவடைவதால், டோக்கியோ ஒலிம்பிக் தொடரில் பங்கேற்பாரா என்பது பற்றி பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இதையும் படிங்க: ஏடிபி ஃபைனல்ஸ்: இரண்டாவது சுற்றில் நடால்..!