மகளிருக்கான கூடைப்பந்து உலகக்கோப்பைத் தொடர் 2022ஆம் ஆண்டு நடக்கவுள்ளது. இதனை நடத்துவதற்கு ஆஸ்திரேலியா, ரஷ்யா ஆகிய இரு நாடுகளிடையே கடும் போட்டி நிலவியது. இறுதியாக தொடரை நடத்தும் வாய்ப்பு ஆஸ்திரேலியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
1994ஆம் ஆண்டுக்கு பிறகு, மீண்டும் மகளிர் கூடைப்பந்து உலகக்கோப்பைத் தொடரை ஆஸ்திரேலியா நடத்தவுள்ளது. 2022ஆம் ஆண்டில் செப்டம்பர் முதல் அக்டோபர் மாதம்வரை 10 நாள்கள் நடக்கும் இந்தத் தொடரில், 12 சர்வதேச அணிகளைச் சேர்ந்த 144 வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனர். மொத்தம் 38 போட்டிகள் நடக்கும் இந்தத் தொடர், சிட்னியில் உள்ள ஒலிம்பிக் பார்க்கில் நடத்தப்படவுள்ளது.
இதுகுறித்து சர்வதேச கூடைப்பந்து சம்மேளனத் தலைவர் ஆண்டிரியஸ் பேசுகையில், '' மகளிர் விளையாட்டுகளில் முக்கிய தொடராகப் பார்க்கப்படும் கூடைப்பந்து உலகக்கோப்பைத் தொடர் சிட்னியில் நடக்கும். இந்தத் தொடரில் பங்கேற்கவுள்ள அணிகளுக்கான தகுதிச்சுற்று தொடர் விரைவில் தொடங்கும்.
மகளிர் விளையாட்டை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதற்கான மிகச்சிறந்த வாய்ப்பு இது. கடந்த மகளிர் உலகக்கோப்பைத் தொடர்கள் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதனால் வரும் உலகக்கோப்பைத் தொடர் அதனைவிட பெரும் வரவேற்பைப் பெறுமென எதிர்பார்க்கிறோம்'' என்றார்.
இதையும் படிங்க: மகளிர் ஐபிஎல் தொடரை காலதாமதமின்றி பிசிசிஐ தொடங்க வேண்டு
ம்