பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் தொடரில் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் தீபக் குமாரும் 10 மீட்டர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் அபிஷேக் வர்மாவும் தங்கப் பதக்கத்தைத் வென்று சாதனைப் படைத்துள்ளனர்.
இதனையடுத்து, நாடு திரும்பிய இருவரும் விமான மூலம் இன்று டெல்லி விமான நிலையத்திற்கு வந்தடைந்தனர். பதக்கங்களுடன் நாடு திரும்பிய இவர்ளுக்கு உறவினர்களும் பொதுமக்களும் மாலை அணிவித்து உற்சாக வரவேற்பளித்தனர்.