ETV Bharat / sports

கோவிட்-19: புரோ லீக் தொடர் ஒத்திவைப்பு

author img

By

Published : Mar 20, 2020, 12:20 PM IST

கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக வருகிற மே 17 வரை புரோ லீக்கின் அனைத்துப் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு (எஃப்.ஐ.ஹெச்.) அறிவித்துள்ளது.

India's Pro League matches against Germany, Great Britain on hold

கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக இம்மாதத்தில் மட்டும் பல்வேறு வகையான விளையாட்டுத் தொடர்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அந்த வரிசையில் தற்போது லண்டனில் நடைபெறவிருந்த புரோ லீக் ஹாக்கி தொடர்களையும் ஒத்திவைப்பதாக, சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

இது குறித்து எஃப்.ஐ.ஹெச். வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவிட்-19 பெருந்தொற்றின் சமீபத்திய செய்திகள் அடிப்படையிலும், உலக சுகாதார மையத்தின் அறிவுரைப்படியும் எஃப்.ஐ.ஹெச்.இன் புரோ ஹாக்கி லீக் தொடர் வருகிற மே 17ஆம் தேதிவரை ஒத்திவைக்கப்படுகிறது எனக் குறிப்பிட்டுள்ளது.

மேலும், கோவிட் -19 பெருந்தொற்றின் விளைவாக அனைத்துப் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் எஃப்.ஐ.ஹெச்., உலக சுகாதார அமைப்பின் ஆலோசனைப்படி அனைத்தையும் கண்காணித்துவருவதாகக் குறிப்பிட்டுள்ளது.

  • FIH with support of all participating National Associations, has decided to put all #FIHProLeague matches scheduled until 17th May on hold.

    Decision is based on latest developments of #COVID19 outbreak & in particular of response to it by relevant public authorities globally.

    — International Hockey Federation (@FIH_Hockey) March 19, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

எஃப்.ஐ.ஹெச். தலைவர் நரிந்தர் பத்ரா, தலைமை செயல் அலுவலர் தியரி வெயில் இணைந்து அனுப்பிய அறிக்கையில், உலகின் அனைத்துப் பகுதிகளிலும் கோவிட்-19 பெருந்தொற்று மக்களின் வாழ்க்கையை சீர்குலைத்துள்ளது. உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள ஆலோசனைகளை நாம் சரியாகப் பின்பற்ற வேண்டும். இது நமது சொந்த ஆரோக்கியத்திற்கும், நம்மை சுற்றியுள்ளவர்களின் ஆரோக்கியத்திற்கும் மிக முக்கியமானது. மேலும் மக்கள் அனைவரிடத்திலும் முன்பு இருந்ததைவிட பலமான ஒற்றுமை தேவை எனக் குறிப்பிட்டுள்ளனர்.

புரோ லீக் ஹாக்கி தொடரில் இந்திய அணி ஏப்ரல் 26ஆம் தேதி ஜெர்மனி அணியுடனும், மே 2ஆம் தேதி இங்கிலாந்து அணியுடனும் லண்டனில் மோதுவதாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கிருமி நாசினி மருந்து தயாரிப்பில் இறங்கிய வார்னே!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.