நேற்று நடைபெற்ற மகளிருக்கான ஹாக்கி தகுதிச்சுற்று போட்டியில் இந்தியாவும், மலேசியாவும் மோதின. இப்போட்டியில் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி, எதிரணியின் டிஃபென்ஸை சிதறடித்தது. ஆட்டத்தின் எட்டாவது நிமிடத்திலேயே இந்தியாவின் குரிந்தர் சிங் கோல் அடித்து அசத்தினார்.
அதன்பின் இந்தியாவின் மந்தீப் சிங் ஆட்டத்தின் 33’, 46’ வது நிமிடத்திலும், குர்ஷாஹிப்ஜித் சிங் 18’, 56’ வது நிமிடங்களிலும் கோல் அடித்து அணி வெற்றி பெறுவதை உறுதிப்படுத்தினர்.
இறுதியில் ஆட்டத்தின் 60ஆவது நிமிடத்தில் எஸ்வி சுனில் கோல் அடிக்க, 6-0 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றிபெற்றது.