ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் அடுத்தாண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் தொடருக்கான ஹாக்கி தகுதிச்சுற்று போட்டிகள் இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற இரண்டாவது தகுதிச்சுற்று ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி, அமெரிக்க மகளிர் அணியை எதிர்கொண்டது.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் அபாரமாக விளையாடிய அமெரிக்க அணி ஆட்டத்தின் தொடக்கம் முதலே அதிராடியாக விளையாடி கோல்களை அடித்தது. இதன் மூலம் அமெரிக்க அணி 4-1 என்ற கோல்கணக்கில் இந்திய அணியை வீழ்த்தியது.
இருந்த போதும், நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி 5-1 என்ற கோல் கணக்கில் அமெரிக்காவை வீழ்த்திருந்தது. இதன் மூலம் இன்றைய கோல் கணக்கையும் கொண்டு 6-5 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெற்றது.
-
FT: 🇮🇳 1-4 🇺🇸
— Hockey India (@TheHockeyIndia) November 2, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
Haar kar jeetne wale ko baazigar kehte hai!💪
Give it up for our Eves' impressive comeback in the Final leg of the @FIH_Hockey Olympic Qualifiers Odisha! pic.twitter.com/GVNoeAU737
">FT: 🇮🇳 1-4 🇺🇸
— Hockey India (@TheHockeyIndia) November 2, 2019
Haar kar jeetne wale ko baazigar kehte hai!💪
Give it up for our Eves' impressive comeback in the Final leg of the @FIH_Hockey Olympic Qualifiers Odisha! pic.twitter.com/GVNoeAU737FT: 🇮🇳 1-4 🇺🇸
— Hockey India (@TheHockeyIndia) November 2, 2019
Haar kar jeetne wale ko baazigar kehte hai!💪
Give it up for our Eves' impressive comeback in the Final leg of the @FIH_Hockey Olympic Qualifiers Odisha! pic.twitter.com/GVNoeAU737
இதன் மூலம் இந்திய மகளிர் அணி 2020 டோக்கியோ ஒலிம்பிக் தொடருக்கான மகளிர் ஹாக்கி போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அமெரிக்காவை அலறவிட்ட இந்தியா- அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்!