ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32ஆவது கோடைகால ஒலிம்பிக் போட்டி அடுத்த ஆண்டு ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 9ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தொடர் தொடங்க இன்னும் எட்டு மாதம் மட்டுமே உள்ள நிலையில், ஹாக்கிப் போட்டிக்கான அட்டவணை வெளியாகியுள்ளது.
ஆடவர் ஹாக்கிப் பிரிவில் இந்தத் தொடரில் மொத்தம் 12 அணிகள் பங்கேற்கின்றன. இதில் இந்திய அணி நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, ஸ்பெயின், நியூசிலாந்து, ஜப்பான் ஆகிய அணிகளுடன் குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ளது.
குரூப் பி பிரிவில் பெல்ஜியம், நெதர்லாந்து, கனடா, ஜெர்மனி, கிரேட் பிரிட்டன், தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. தற்போது வெளியான அட்டவணையின்படி ஜூலை 25ஆம் தேதி இந்திய அணி தனது முதல் போட்டியில் நியூசிலாந்து அணியுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது. அதன்பின், ஆஸ்திரேலியா, ஸ்பெயின், அர்ஜென்டினா, ஜப்பான் ஆகிய அணிகளை இந்திய அணி எதிர்கொள்ளவுள்ளது.
இந்திய ஆடவர் அணியின் போட்டி அட்டவணை பின்வருமாறு:
- இந்தியா vs நியூசிலாந்து, ஜூலை 25
- இந்தியா vs ஆஸ்திரேலியா, ஜூலை 26
- இந்தியா vs ஸ்பெயின், ஜூலை 28
- இந்தியா vs அர்ஜென்டினா, ஜூலை 30
- இந்தியா vs ஜப்பான், ஜூலை 31
இதேபோல், மகளிர் ஹாக்கிப் பிரிவில் குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணியும் ஜூலை 25ஆம் தேதி தனது முதல் போட்டியில் நெதர்லாந்து அணியுடன் மோதவுள்ளது. ஆஸ்திரேலியா, ஸ்பெயின், அர்ஜென்டினா, சீனா, நியூசிலாந்து, ஜப்பான் அணிகள் குரூப் பி பிரிவில் இடம்பெற்றுள்ளன.
இந்திய மகளிர் அணியின் போட்டி அட்டவணை
-
The moment we’ve all been waiting for! 🤩
— Hockey India (@TheHockeyIndia) December 17, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
The Summer Olympics 2020 schedule for both Men’s and Women’s categories is here! Which clash are you looking forward to the most?#IndiaKaGame #GiftOfHockey pic.twitter.com/UaxW8LvOSA
">The moment we’ve all been waiting for! 🤩
— Hockey India (@TheHockeyIndia) December 17, 2019
The Summer Olympics 2020 schedule for both Men’s and Women’s categories is here! Which clash are you looking forward to the most?#IndiaKaGame #GiftOfHockey pic.twitter.com/UaxW8LvOSAThe moment we’ve all been waiting for! 🤩
— Hockey India (@TheHockeyIndia) December 17, 2019
The Summer Olympics 2020 schedule for both Men’s and Women’s categories is here! Which clash are you looking forward to the most?#IndiaKaGame #GiftOfHockey pic.twitter.com/UaxW8LvOSA
- இந்தியா vs நெதர்லாந்து, ஜூலை 25
- இந்தியா vs ஜெர்மனி, ஜூலை 27
- இந்தியா vs கிரேட் பிரிட்டன், ஜூலை 29
- இந்தியா vs அயர்லாந்து, ஜூலை 31
- இந்தியா vs தென் ஆப்பிரிக்கா, ஆகஸ்ட் 1
ஆடவர், மகளிர் அணிகளுக்கான தங்கப்பதக்கத்துக்கான போட்டிகள் ஆகஸ்ட் 6, 7ஆம் தேதி நடைபெறவுள்ளது. 1980 ஒலிம்பிக்கிற்குப் பிறகு எந்த ஒரு ஒலிம்பிக் போட்டியிலும் பதக்கம் வெல்லாமல் இருக்கும் இந்திய ஆடவர் அணி இம்முறையாவது பதக்கம் வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ஹாக்கி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
அதேசமயம், 1980 ஒலிம்பிக்கிற்குப் பிறகு தற்போது இரண்டாவது முறையாக இந்தத் தொடரில் பங்கேற்கும் இந்திய மகளிர் அணியும் பதக்கம் வென்று தாயகம் திரும்புமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இதையும் படிங்க: ஹாக்கி பிதாமகன் தயான் சந்த்தை மறந்த இந்தியா!