ETV Bharat / sports

விளையாட்டு 2020: ஹாக்கி நிகழ்வுகள் ஓர் பார்வை! - Hockey 2020

இந்த ஆண்டு ஹாக்கி விளையாட்டுப் போட்டிகள் பெரும்பாலும் நடைபெறாமல் இருந்தாலும், பல்பீர் சிங் மறைவு, இந்திய மகளிர் அணி கேப்டன் ராணி ராம்பாலுக்கு கேல் ரத்னா விருது என சில முக்கிய நிகழ்வுகள் குறித்து விவரிக்கிறது இத்தொகுப்பு.

Sports Year End 2020-Hockey
Sports Year End 2020-Hockey
author img

By

Published : Dec 31, 2020, 10:57 AM IST

ஹாக்கி நிகழ்வுகள் ஓர் பார்வை

உலகின் சிறந்த வீராங்கனை ராணி ராம்பால்

கடந்த ஜனவரி மாதம் ஹாக்கி விளையாட்டில் உலகின் சிறந்த வீராங்கனைக்கான விருதிற்கு இந்திய மகளிர் ஹாக்கி அணியின் கேப்டன் ராணி ராம்பால் பரிந்துரைசெய்யப்பட்டிருந்தார். இந்தப் பரிந்துரையில் உலகம் முழுவதுமிருந்து 25 வீரர்கள் தேர்வுசெய்யப்பட்டனர். இதற்கென இணையத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

உலகின் சிறந்த வீராங்கனை விருதை வென்ற ராணி ராம்பால்

அதில் மொத்தம் பதிவான 7,05,610 வாக்குகளில் 1,99,477 வாக்குகள் பெற்று இந்திய ஹாக்கி அணியின் ராணி ராம்பால் வெற்றிபெற்றார். இதனால் ஹாக்கி விளையாட்டில் உலகின் சிறந்த வீராங்கனை விருதைக் கைப்பற்றிய முதல் ஹாக்கி வீராங்கனை என்ற பெருமையையும் ராணி ராம்பால் பெற்றார்.

ஆண்டின் சிறந்த ஹாக்கி வீராங்கனை லால்ரேம்சியாமி

சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சிறந்து விளங்கும் வீரர், வீரராங்கனைகளைத் தேர்வுசெய்து அவர்களுக்கு விருது வழங்கி கௌரவிப்பது வழக்கம். அந்த வகையில் 2019ஆம் ஆண்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வீரர், வீராங்கனைகளின் பெயர்கள் சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பால் பிப்ரவரி மாதம் அறிவிக்கப்பட்டது.

இதில் 2019ஆம் ஆண்டின் வளர்ந்துவரும் வீராங்கனையாக இந்தியாவின் இளம் ஹாக்கி வீராங்கனை லால்ரேம்சியாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 2018ஆம் ஆண்டில் இந்திய மகளிர் ஹாக்கி அணியில் அறிமுகமான இவர், தொடர்ந்து சிறப்பான பங்களிப்பை அளித்துவருகிறார். 2018இல் ஜப்பானில் நடைபெற்ற ஹாக்கி இறுதிப் போட்டியில் இந்திய அணி வெற்றிபெறுவதற்கு முக்கியப் பங்காற்றினார்.

பல்பீர் சிங் குல்லார் மறைவு

பல்பீர் சிங் குல்லர்
பல்பீர் சிங் குல்லர்

1968ஆம் ஆண்டு மெக்ஸிகோவில் நடந்த ஒலிம்பிக் தொடரில் இந்திய ஹாக்கி அணி வெண்கலப் பதக்கம் வென்றது. அந்தத் தொடரில் இந்திய அணி பதக்கம் வெல்வதற்கு பல்பீர் சிங் குல்லார் முக்கியக் காரணமாக அமைந்தார். கடந்த மார்ச் மாதம் பல்பீர் சிங் தனது மகனுடன் அமெரிக்காவுக்குப் புறப்பட்டபோது திடீரென நெஞ்சு வலி காரணமாக உயிரிழந்தார்.

தயான் சந்த் விருதுக்கு ஹர்பிந்தர் சிங் தேர்வு

தயான் சந்த் விருதைப் பெற்ற ஹர்பிந்தர் சிங்

மார்ச் மாதம் டெல்லியில் மூன்றாவது ஹாக்கி இந்தியா விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில், வாழ்நாள் சாதனையாளரான தயான் சந்த் விருதுக்கு இந்திய அணியின் முன்னாள் ஹாக்கி வீரர் ஹர்பிந்தர் சிங் தேர்வுசெய்யப்பட்டார். அவருக்கு அந்த விருதை மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு வழங்கி கெளரவித்தார். இவர் முன்னதாக 1967இல் மத்திய அரசின் அர்ஜுனா விருதையும் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹாக்கி ஜாம்பவான் பல்பீர் சிங் மறைவு

ஹாக்கி ஜாம்பவான், இளம் வீரர்களின் நம்பிக்கை நட்சத்திரம், நானாஜி என அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டவர் பல்பீர் சிங் (96). இவர், கடந்த மே மாதம் உடல்நலக்குறைவு காரணமாக மொகாலியிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்துவந்த சூழலில், சிகிச்சைப் பலனின்றி மே 25ஆம் தேதி காலமானார்.

ஹாக்கி ஜாம்பவான் பல்பீர் சிங்
ஹாக்கி ஜாம்பவான் பல்பீர் சிங்

இந்திய ஹாக்கியில் ஜாம்பவானாக வலம்வந்த பல்பீர் சிங், 1948 லண்டன் ஒலிம்பிக், 1952 ஹெல்சின்கி ஒலிம்பிக், 1956 மெல்போர்ன் ஒலிம்பிக் ஆகியவற்றில் இந்திய ஹாக்கி அணி தங்கப்பதக்கத்தை கைப்பற்ற மிக முக்கியக் காரணமாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிபிஇ உடையில் கேல் ரத்னா விருதைப் பெற்ற ராணி ராம்பால்

இந்திய ஹாக்கி அணியின் முன்னோடி தயான் சந்தின் பிறந்தநாளை கெளரவிக்கும்விதமாக, மத்திய அரசு 2012ஆம் ஆண்டு முதல் ஆகஸ்ட் 29ஆம் தேதியை தேசிய விளையாட்டு தினமாகக் கொண்டாடிவருகிறது. விளையாட்டுத் துறையில் சாதனை படைக்கும் வீரர்களுக்கு கேல் ரத்னா, அர்ஜுனா, தயான் சந்த், துரோணாச்சாரியா ஆகிய விருதுகளை இந்த தினத்தில் வழங்கி கௌரவித்துவருகிறது.

பிபிஇ உடையணிந்து ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருதைப் பெற்ற ராணி ராம்பால்

அந்த வகையில் இந்தாண்டு ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்ட இந்திய மகளிர் ஹாக்கி அணியின் கேப்டன் ராணி ராம்பால், பிபிஇ எனப்படும் தனிநபர் பாதுகாப்பு உடையணிந்து, குடியரசுத் தலைவரிடம் விருதைப் பெற்றார். அப்புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது.

20 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய ஜூனியர் ஹாக்கி அணியில் தமிழ்நாடு வீரர்கள்

மாரீஸ்வரன்
மாரீஸ்வரன்

தமிழ்நாட்டிலிருந்து இந்திய ஜூனியர் ஹாக்கி அணிக்காக கோவில்பட்டியைச் சேர்ந்த மாரீஸ்வரன், அரியலூரைச் சேர்ந்த கார்த்திக் ஆகியோர் கடந்த அக்டோபர் மாதம் தேர்வுசெய்யப்பட்டனர். இதன்மூலம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டிலிருந்து இந்திய ஜூனியர் ஹாக்கி அணிக்காக வீரர்கள் தேர்வுசெய்யப்பட்டது இதுவே முதல் முறையாகும்.

இதையும் படிங்க:இந்தோனேஷியா மாஸ்டர்ஸ் முதல் 'I Retire' பதிவு வரை: 2020 பேட்மிண்டன் ஓர் பார்வை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.