ETV Bharat / sports

சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை - வெற்றியை இழந்த இந்தியா! - india vs south korea

மலேசியா : சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி தொடரின் இந்தியா - தென் கொரியா அணிகளுக்கு இடையேயான ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிவடைந்தது.

இந்தியா - தென் கொரியா மோதியப் போட்டி
author img

By

Published : Mar 24, 2019, 5:28 PM IST

28-வது சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கித் தொடர் மலேசியாவில் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் ஜப்பானை வீழ்த்திய இந்திய அணி, இன்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் தென் கொரியாவை எதிர்கொண்டது. முதல் பாதி ஆட்டம் தொடங்கிய நிலையில், தொடக்கம் முதலே இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தியது. தொடர்ந்து கோல் அடிக்க முயற்சித்த இந்திய அணிக்கு, 28-வது நிமிடத்தில் பலன் கிடைத்தது. இந்தியாவின் மந்தீப் சிங் முதல் கோலை அடிக்க, இந்திய அணி 1-0 என முன்னிலை பெற்றது. முதல் பாதி இறுதிவரை இரு அணிகளும் மேலும் எந்த கோல்களும் அடிக்காததால் 1-0 என முடிவடைந்தது.

பின்னர் தொடங்கிய இரண்டாம் பாதியில், தென் கொரியா அணி ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்த, இந்திய அணியின் கோல் கீப்பர் கிருஷன் பதக்கின் சாதுர்யத்தால் கொரிய அணியின் முயற்சிகள் எடுபடாமல் போக, கொரிய அணி வீரர்கள் பரபரப்பாகினர். இதற்கு பின்னர், இரண்டாம் பாதியில் ஆட்டம் தொடங்கிய சில நேரங்களில், மழையால் குறுக்கிட்டதால் ஆட்டம் பாதிக்கப்பட்டது.

hockey
இந்தியா - தென் கொரியா இடையேயான ஆட்டம்

இதனையடுத்து மழை நின்ற பின்னர் மீண்டும் ஆட்டம் தொடங்கப்பட்டது. இறுதி நிமிடங்களில் கொரிய அணிக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கொடுக்கப்பட்டதால், ஆட்டம் பரபரப்பின் எல்லைக்கே சென்றது. அந்த வாய்ப்பை இந்திய வீரர் ஸ்ரீஜேஷின் அற்புதமான ஆட்டத்தால், கொரியாவின் கோல் அடிக்கும் வாய்ப்பு தடுக்கப்பட்டது. தொடர்ந்து ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கொரிய அணியின் ஜாங் கோல் அடிக்க, ஆட்டம் 1-1 என சமனில் முடிவடைந்தது.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.