இந்தியாவில் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை படிபடியாக உயர்ந்துவருகிறது. நேற்று ஒரே நாளில் 147 பேருக்கு கோவிட்-19 தொற்று இருப்பது உறுதியான நிலையில், இதுவரை நாட்டில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1397ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் 35 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனைக் கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் வரும் 14ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவால் தினக்கூலிகள், சிறு குறு தொழிலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உதவும் வகையிலும், இந்த வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காகவும் உங்களால் முடிந்த நிதியை பிரதமரின் நிவாரண நிதி கணக்கிற்கு செலுத்தலாம் என பிரதமர் மோடி தெரிவித்திருந்தார். இதையடுத்து, பல்வேறு தரப்பினரும் தங்களால் முடிந்த நிதியுதவி செய்துவருகின்றனர்.
-
Let us all come together in this fight against a global pandemic 🤝🏼
— Hockey India (@TheHockeyIndia) April 1, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
Hockey India on Wednesday pledged to contribute Rs 25.00 lakhs towards the PM Cares Fund in a bid to join India's fight against the Covid-19 Pandemic. For more details, read on 👇https://t.co/6HQVf0QXWM
">Let us all come together in this fight against a global pandemic 🤝🏼
— Hockey India (@TheHockeyIndia) April 1, 2020
Hockey India on Wednesday pledged to contribute Rs 25.00 lakhs towards the PM Cares Fund in a bid to join India's fight against the Covid-19 Pandemic. For more details, read on 👇https://t.co/6HQVf0QXWMLet us all come together in this fight against a global pandemic 🤝🏼
— Hockey India (@TheHockeyIndia) April 1, 2020
Hockey India on Wednesday pledged to contribute Rs 25.00 lakhs towards the PM Cares Fund in a bid to join India's fight against the Covid-19 Pandemic. For more details, read on 👇https://t.co/6HQVf0QXWM
அந்தவகையில், பிரதமரின் நிவாரண நிதிக்கு ரூ. 25 லட்சம் நிதியுதவி வழங்கவுள்ளதாக ஹாக்கி இந்தியா தெரிவித்துள்ளது. இது குறித்து ஹாக்கி இந்தியா தலைவர் முகமது முஷ்டாக் அகமது கூறுகையில், "இந்த கடினமான சூழலில் ஒரே தேசமாக நாம் அனைவரும் ஒன்றிணைந்து, கோவிட்-19 தொற்றுக்கு எதிராக உதவி செய்து நமது கடமையை நிறைவேற்றுவோம். ஹாக்கி இந்தியா எப்போதும் இதுபோன்ற சூழ்நிலைகளில் உதவி செய்ய முன்வரும். அதனால், இந்த கோவிட்-19 தொற்று தடுப்பு நடவடிக்கைக்காக நாங்கள் பிரதமரின் நிவாரண நிதிக்கு ரூ. 25 லட்சம் நிதியுதவி செய்ய முடிவு செய்துள்ளோம்" என்றார்.
இதையும் படிங்க: கரோனா: முன்னாள் கால்பந்து கிளப் தலைவர் உயிரிழப்பு