ETV Bharat / sports

இந்திய ஹாக்கி அணி அனலிட்டிக்கல் பயிற்சியாளராக கிரெக் கிளார்க் நியமனம்!

author img

By

Published : Jan 5, 2021, 5:42 PM IST

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் முடிவும் வரை இந்திய ஆண்கள் ஹாக்கி அணியின் புதிய அனலிட்டிக்கல் பயிற்சியாளராக தென் ஆப்பிரிக்காவின் கிரெக் கிளார்க் நியமிக்கப்பட்டுள்ளார்.

Gregg Clark appointed analytical coach for Indian men's hockey team

மூன்று வார இடைவெளிக்குப் பின் பெங்களூருவில் உள்ள தேசிய விளையாட்டு பயிற்சி முகாமில் இந்திய ஆண்கள் ஹாக்கி அணி பயிற்சியை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் ஒலிம்பிக் போட்டிகளுக்கு தயாராகிவரும் இந்திய ஆடவர் ஹாக்கி அணியின் புதிய அனலிட்டிக்கல் பயிற்சியாளராக தென் ஆப்பிரிக்காவின் கிரெக் கிளார்க் நியமிக்கப்பட்டுள்ளார்.

வரவுள்ள ஒலிம்பிக் போட்டிகள் முடியும் வரை கிரெக் கிளார்க் இந்திய அணியின் அனலிட்டிக்கல் பயிற்சியாளராக செயல்படுவார் என்று இந்திய ஹாக்கி கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

தென் ஆப்பிரிக்க ஹாக்கி அணியின் முன்னாள் வீரரான கிரெக் கிளார்க், அந்த அணிக்காக 250 சர்வதேச போட்டிகளில் பங்கேற்றுள்ளார். அதில் இரண்டு ஒலிம்பிக், இரண்டு உலகக்கோப்பை, இரண்டு காமன்வெல்த் போட்டிகளும் அடங்கும். பின்னர் 2017ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரை கனடா தேசிய ஹாக்கி அணியின் துணைப் பயிற்சியாளராக செயல்பட்டு வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:’வரவிருக்கும் போட்டிகளுக்கு இப்போதே நாங்கள் எங்களைத் தயார்படுத்தவுள்ளோம்' - கிரஹாம் ரீட்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.