ETV Bharat / sports

உணவு தேவை உள்ளவர்களுக்கு நிதி திரட்டும் முயற்சியில் இந்திய மகளிர் ஹாக்கி அணி!

author img

By

Published : Apr 17, 2020, 6:54 PM IST

கோவிட்-19 பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், உணவு தேவைப்படும் ஏழை மக்களுக்கு உதவ நிதி திரட்டுவதற்காக இந்திய மகளிர் ஹாக்கி அணி இன்று முதல் 18 நாள் வேடிக்கையான உடற்பயிற்சி சவாலை தொடங்கவுள்ளது.

Combating COVID-19: Indian women's hockey team to raise funds to feed needy

கோவிட்-19 பெருந்தொற்றால் இந்தியாவில் இதுவரை 14ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டும், 400க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தும் உள்ளனர். இப்பெருந்தொற்றின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் மே 3ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில், இப்பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், உணவின்றி தவிக்கும் ஏழை மக்கள், புலம்பெயர்ந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதி திரட்டும் முயற்சியாக, இந்திய மகளிர் ஹாக்கி அணியைச் சேர்ந்த வீராங்கனைகள் இன்று முதல் 18 நாட்களுக்கு வேடிக்கையான உடற்பயிற்சி சாவலை தொடங்கவுள்ளதாக, இந்திய மகளிர் அணி கேப்டன் ராணி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய ராணி, கோவிட்-19 பெருந்தொற்றுக் காரணமாக நாடுமுழுவதும் பல லட்சக்கணக்கான மக்கள் உணவின்றி தவித்துவருவதாக தினம்தோறும் செய்திகளிலும், சமூக வலைதளங்களிலும் செய்திகள் வெளியகிவருகின்றன. அதனால் எங்களால் இயன்ற உதவிகளை அவர்களுக்கு செய்யவேண்டுமென முடிவு செய்துள்ளோம். அதற்காக தற்போது இணைய வழியாக உடற்பயிற்சி சாவலை நடத்துவதன் மூலம் அவர்களுக்கு தேவையான உதவிகள் கிடைக்கும் என நாங்கள் நம்புகிறோம். மேலும் இது ஊரடங்கு உத்தரவால் வீட்டிலேயே இருக்கும் பொதுமக்களின் உடல்நலனையும் மெருகேற்றும் என்பதால் இதனை செய்யவுள்ளோம். அதேசமயம் இதன்மூலம் கிடைக்கும் நிதியைக் கொண்டு குறைந்தது ஆயிரம் குடும்பங்களின் உணவு தேவையாவது பூர்த்தியடையும் என்று தெரிவித்துள்ளார்.

இந்திய மகளிர் ஹாக்கி அணியின் இந்த இணைய வழி உடற்பயிற்சி சவாலில் அணியின் வீரர்கள் ஒவ்வொரு நாளும் ஒரு புதிய சவாலை எதிர்கொள்ள வேண்டும். இச்சவாலில் பங்கேற்க ஒவ்வொரு வீரரும் தலா 100 ரூபாய் முன்பதிவு கட்டணமாக செலுத்த வேண்டும் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சர்வதேச டேபிஸ் டென்னிஸ் தரவரிசைப் பட்டியலில் சாதனை படைத்த சரத் கமல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.