ETV Bharat / sports

ஹாக்கி: சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்ற சென்னை சிட்டி போலீஸ்!

கிருஷ்ணகிரி: நாகரசம்பட்டியில்  நடைபெற்ற  மாநில அளவிலான காவல் துறை அணிகளுக்கு இடையிலான ஹாக்கி போட்டியில் சென்னை சிட்டி போலீஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது.

Chennai
author img

By

Published : Sep 30, 2019, 12:07 PM IST

கிருஷ்ணகிரி மாவட்டம் நாகரசம்பட்டியில் நேரு ஹாக்கி கிளப், மோகன் நினைவு ஹாக்கி குழு சார்பில் 34ஆவது ஐந்து மாநில காவல் துறையினர் அணிகளுக்கு இடையிலான ஹாக்கிப் போட்டி நடைபெற்றது.

இதில், தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட ஐந்து மாநிலங்களிலிருந்து 36 ஹாக்கி அணிகள் பங்கேற்று விளையாடின.

நாக் அவுட் முறையில் நடைபெற்ற இந்தத் தொடரில் புதுச்சேரி, தமிழ்நாடு, கேரளா, ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 10 ஹாக்கி அணிகள் அடுத்த சுற்றுப் போட்டிக்கு முன்னேறி விளையாடியது. இந்நிலையில், நேற்று நடைபெற்ற இந்தத் தொடரின் இறுதிப் போட்டியில் சென்னை சிட்டி அணி தூத்துக்குடி மாவட்ட அணியை சந்தித்தது.

விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் சென்னை சிட்டி போலீஸ் அணி 5-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது.

ஹாக்கி போட்டி

இதையடுத்து, இந்தத் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சிட்டி அணிக்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சக்திவேல் சுழல் கோப்பையையும் பரிசுத் தொகையும் வழங்கினார். இதேபோல, இரண்டாம் இடத்தைப் பிடித்த தூத்துக்குடி அணிக்கும் மூன்றாம் இடம் பிடித்த நாகரசம்பட்டி அணிக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

Intro:கிருஷ்ணகிரி மாவட்டம் நாகரசம்பட்டியில்  நடத்தப்பட்ட மாநில அளவிலான ஹாக்கி இறுதிப் போட்டியில் சென்னை சிட்டி போலிஸ் அணி வெறிப் பெற்று சம்பியன் பட்டத்தினை தட்டிச் சென்றது.Body:கிருஷ்ணகிரி மாவட்டம் நாகரசம்பட்டியில்  நடத்தப்பட்ட மாநில அளவிலான ஹாக்கி இறுதிப் போட்டியில் சென்னை சிட்டி போலிஸ் அணி வெறிப் பெற்று சம்பியன் பட்டத்தினை தட்டிச் சென்றது.

கிருஷ்ணகிரி மாவட்டம் நாகரசம்பட்டி நேரு ஹாக்கி கிளப் மற்றும் மோகன் நினைவு ஹாக்கி குழுவும் இணைந்து 34 - வது ஐந்து மாநில அளவிலான ஹாக்கிப் போட்டி மூன்று நாள்கள் நடைபெற்றது,

நகரசம்படி பெரியர் அரசு மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில்  துவங்கிய இந்த ஹாக்கிப் போட்டியில் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா, பாண்டிச்சேரி ஆகிய ஐந்து மாநிலத்தில் இருந்து 36 ஹாக்கி அணிகள் கலந்துக் கொணடு் விளையாடின.

நாக் அவுட் முறையில் நடைபெற்ற இந்தப் போட்டியில் பாண்டிச்சேரி, தமிழகம், கேரளா, ஆகிய மாநிலங்களை சேர்ந்த 
10-ஹாக்கி அணிகள் அடுத்த சுற்றுப் போட்டிக்கு முன்னேறி விளையாடியது.

இதன் இறுதி ஹாக்கி் போட்டியில் சென்னை சிட்டி அணியும், தூத்துக்குடி மாவட்ட 
அணியும் விளையாடியது, விறுவிறுப்பாக நடைப்பெற்ற இந்தப் போட்டி முடிவில் தூத்துக்குடி அணியை விழ்த்தி சென்னை சிட்டி அணி 5 கோல் அடித்து வெற்றி பெற்றது..

பின்னர் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு விழாவின் போது 
கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சத்திவேல் கலந்துக் கொண்டு சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சிட்டி அணிக்கு சுழல் கோப்பை மற்றும் பரிசுத் தொகையும் வழங்கினார். இதேபோல இரண்டாம் இடத்தை பிடித்த தூத்துகுடி அணிக்கும் முன்றாம் இடம் பிடித்த நாகரசம்பட்டி அணிக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.