ETV Bharat / sports

இந்திய அணியின் நிலையை ஆசிய சாம்பியன்ஸ் டிராபி தொடரில் கண்டுகொள்ளலாம்: சுமித் - இந்திய ஹாக்கி வீரர் சுமித்

பெங்களூரு: இந்திய ஹாக்கி அணியின் நிலை எப்படி உள்ளது என்று மார்ச் மாதம் நடக்கவுள்ள ஆசிய சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அறிந்துகொள்ளலாம் என இந்திய ஹாக்கி அணியின் மிட் ஃபீல்டர் சுமித் தெரிவித்துள்ளார்.

asian-champions-trophy-will-show-the-level-were-at-sumit

author img

By

Published : Nov 9, 2020, 5:04 PM IST

கரோனா வைரஸ் பாதிப்பால் ஹாக்கி விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படாத நிலை உள்ளது. இதனால் இந்திய ஹாக்கி அணி கரோனச வைரஸ் சூழல் குறைந்ததற்கு பின் மார்ச் மாதம் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி நடக்கவுள்ளது.

இதைப்பற்றி இந்திய ஹாக்கி வீரர் சுமித் கருத்து தெரிவித்துள்ளார். அதில், '' ஹாக்கி பயிற்சியை மீண்டும் தொடங்குவதில் ஆர்வமாக இருக்கிறோம். இந்திய ஹாக்கி ஆணையம், ஹாக்கி இந்தியா சார்பாக அனைத்து வீரர்களுக்கு பயோ பபுள் சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. இந்திய அணியின் முழுமையான நிலை ஆசிய சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அறிந்துகொள்ள முடியும். அந்தத் தொடரில் எங்களின் ஆட்டம் பொறுத்து, ஒலிம்பிக் போட்டிகளுக்கு தயாராவோம்.

கடந்த ஜூன் மாதம் நடந்த எஃப்ஐஹெச் தொடர் இறுதிப் போட்டியின்போது மணிக்கட்டில் காயம் ஏற்பட்டது. அதிலிருந்து மீண்டு வருவது பெரும் பயணமாக இருந்தது. மீண்டும் ஹாக்கி பயிற்சியைத் தொடங்கிய பின், இந்த ஆண்டு எஃப்ஐஹெச் தொடரில் சிறந்த இரண்டு அணிகளுக்கு எதிராக ஆடியது மகிழ்ச்சியளிக்கிறது.

இந்திய ஹாக்கி அணியின் மிட் ஃபீல்டர் சுமித்

இந்திய அணியில் இடம்பெற வேண்டும் என்றால் நம் மீது அணி நிர்வாகம் என்ன எதிர்பார்க்கிறதோ, அதனை சரியாக செயல்படுத்த வேண்டும். இப்போதைக்கு எனது பயிற்சியில் 100 சதவிகிதத்தை கொடுக்கிறேன். அடுத்த ஆண்டு நடக்கவுள்ள ஆசிய சாம்பியன்ஸ் டிராபி தொடரை அதிகம் எதிர்பார்க்கிறேன். நமது டைட்டிலை மீண்டும் தக்க வைக்க வேண்டும்.

கரோனா வைரஸிற்கு பின் எந்தவித போட்டிகளும் நடக்கவில்லை. அதனால் இந்திய அணிக்குள்ளேயே சில பயிற்சிப் போட்டிகள் நடத்தப்பட்டு எங்களின் முழுத்திறனை வெளிக்கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. ரெட் செஷன்ஸ் என்ற பயிற்சியை இந்திய அணி நிர்வாகம் செயல்படுத்தவுள்ளது.

அந்தப் பயிற்சியின் மூலம் இந்திய வீரர்களின் முழுமையான திறனும் நிச்சயம் வெளிப்படும். உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் தயாராவதற்கு நிச்சயம் அந்தப் பயிற்சி உதவும்'' என்றார்.

இதையும் படிங்க: யார்க்கர் நடராஜன்தான் இந்த ஐபிஎல்-ன் கண்டுபிடிப்பு: டேவிட் வார்னர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.