ETV Bharat / sports

போதும் இதோட நிறுத்திக்கோங்க... லிவர்பூல் அணிக்கு 10 வயது கால்பந்து ரசிகர் எழுதிய கடிதம் - liverpool manchester united

இங்கிலாந்தின் லிவர்பூல் கால்பந்து அணிக்கு, மான்செஸ்டர் யுனைட்டெட் அணியின் பத்து வயது ரசிகர் ஒருவர் அளித்த கோரிக்கை இணையத்தில் வேகமாகப் பரவிவருகிறது.

liverpool
liverpool
author img

By

Published : Feb 22, 2020, 2:00 PM IST

இங்கிலாந்தில் உள்ள கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையே நடத்தப்படும் இங்கிலீஷ் பிரீமியர் லீக் தொடர் தற்போது நடைபெற்றுவருகிறது. இந்தத் தொடரில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திவரும் லிவர்பூல் கிளப் அணி, இதுவரை விளையாடிய 26 போட்டிகளில் 25 வெற்றி, ஒரு டிரா என தோல்வியையே சந்திக்காமல் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்துவருகிறது. இதனால் இந்தச் சீசனில் லிவர்பூல் அணி சாம்பியன் பட்டம் வெல்வது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது.

இதனிடையே லிவர்பூல் அணியின் வெற்றியைப் பொறுத்துக்கொள்ள முடியாத பத்து வயதே நிரம்பிய டாரஹ் என்ற மான்செஸ்டர் அணியின் இளம் ரசிகர் ஒருவர், லிவர்பூல் அணியின் பயிற்சியாளருக்கு கோரிக்கை கடிதம் ஒன்றை அனுப்பினார்.

அந்தக் கடிதத்தில் அவர், உங்கள் அணி இன்னும் ஒன்பது போட்டிகளில் வெற்றிபெற்றால், இங்கிலீஷ் பிரீமியர் லீக்கில் தொடர்ச்சியாக வெற்றிபெற்ற அணி என்ற சாதனையை லிவர்பூல் படைக்கும். மான்செஸ்டர் யுனைட்டெட்டின் ரசிகனாக பார்த்தால் அது எனக்கு சோகமான ஒன்றாக இருக்கும்.

எனவே, அடுத்துவரும் சில போட்டிகளில் லிவர்பூர் அணியை தோல்வியடைய செய்யுங்கள் என்று அதில் குறிப்பிட்டிருந்தார். இந்தக் கடிதத்திற்கு பதில் அனுப்பிய லிவர்பூல் அணியின் பயிற்சியாளர் குர்ஜென் க்ளோப், 'துர்பாக்கியமாக என்னால் உன்னுடைய கோரிக்கையை நிறைவேற்ற முடியாது. ஏனெனில் உலகம் முழுவதிலும் உள்ள லிவர்பூல் ரசிகர்கள் எங்கள் அணி சாம்பியன் ஆக வேண்டும் என நினைப்பதால் லிவர்பூல் வெற்றிபெற தேவையான அனைத்தையும் செய்வேன். அவர்களைக் கைவிட வேண்டாம் என நினைக்கிறேன்' என்று உருக்கமாக எழுதியிருந்தார்.

liverpool, 10-yr-old ManU fan
லிவர்பூல் அணிக்கு கடிதம் எழுதிய சிறுவன்

மேலும், 'நாங்கள் கடந்த காலங்களில் பல போட்டிகளில் தோற்றுள்ளோம், எதிர்காலங்களில் தோற்கலாம். அதுவே கால்பந்து விளையாட்டு. பத்து வயதில் இருக்கும் நீங்கள் நிகழ்காலத்தில் நடப்பவைகள் நிரந்தரம் என்று எண்ணலாம், ஆனால் 52 வயது மனிதனாக நான் ஒன்று கூறுகிறேன். அவை எப்போதும் நிலையானதாக இருப்பதில்லை' என அந்தக் கடிதத்தில் கூறியிருந்தார்.

ரசிகரின் கடிதமும் அதற்கு லிவர்பூல் அணி பயிற்சியாளர் அளித்த பதிலும் கால்பந்து ரசிகர்களிடையே பேசுபொருளாக இணையத்தில் பரவிவருகின்றன.

இதையும் படிங்க: உ.பி.யில் 3 ஆயிரம் டன் தங்கப்புதையல் - இந்தியாவுக்கு அடித்த லாட்டரி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.