ETV Bharat / sports

ஐஎஸ்எல்: எஃப்சி கோவா - நார்த் ஈஸ்ட் யுனைடெட் ஆட்டம் டிரா! - இகோர் அங்குலா

ஐஎஸ்எல் தொடரில் இன்று நடைபெற்ற எஃப்சி கோவா - நார்த் ஈஸ்ட் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிராவில் முடிவடைந்தது.

Sylla, Angulo score as NEUFC and Goa share points

author img

By

Published : Dec 1, 2020, 12:10 AM IST

கோவாவில் நடைபெற்று வரும் ஐஎஸ்எல் கால்பந்துத் தொடரின் ஏழாவது சீசன் விறுவிறுப்புக்குப் பஞ்சமின்றி நடந்து வருகிறது. இதில் இன்று (நவ. 30) நடைபெற்ற 12ஆவது லீக் ஆட்டத்தில் எஃப்சி கோவா அணி - நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியை எதிர்கொண்டது.

பரபரப்புடன் தொடங்கிய இந்த ஆட்டத்தில் இரு அணி வீரர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த ஆட்டத்தின் 40ஆவது நிமிடத்தில் நார்த் ஈஸ்ட் அணியின் இத்ரிசா சில்லா கோலடித்து அணியின் கோல் கணக்கை தொடக்கி வைத்தார்.

அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் எஃப்சி கோவா அணியின் நட்சத்திர வீரர் இகோர் அங்குலா ஆட்டத்தின் 43ஆவது நிமிடத்தில் கோலடித்து அசத்தினார். இதன் மூலம் முதல் பாதி ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமனிலையில் இருந்தது.

  • DEADLOCK!

    Nothing to separate the 2️⃣ teams at the end of a spirited display at the Fatorda. The Highlanders continue their unbeaten run and will take home a point from the defending League Holders! 💪🏻#StrongerAsOne #FCGNEU pic.twitter.com/V3vJl9U7Kr

    — NorthEast United FC (@NEUtdFC) November 30, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் பாதி ஆட்டத்தில் இரு அணி வீரர்களும் கடுமையான டிஃபென்ஸை வெளிப்படுத்தி வந்ததால், எந்த அணியாலும் கோலடிக்க இயலவில்லை. இதனால் ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் இருந்ததால், ஆட்டம் டிராவில் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

இதன் மூலம் ஐஎஸ்எல் புள்ளிப்பட்டியலில் நார்த் ஈஸ்ட் அணி 5 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், எஃப்சி கோவா அணி இரண்டு புள்ளிகளுடன் ஏழாவது இடத்தில் நீடிக்கின்றன.

இதையும் படிங்க: NZ vs WI: கடைசி டி20 போட்டி மழையால் ரத்து!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.