ETV Bharat / sports

கால்பந்து: யூரோ தகுதிச் சுற்றில் ரொனால்டோ காயம் - Euro Football

லிஸ்பான்: செர்பியாவுக்கு எதிரான யூரோ தகுதிச் சுற்று கால்பந்து போட்டியில் போர்ச்சுகல் நாட்டின் நட்சத்திர வீரர் ரொனால்டோ காயம் அடைந்துள்ளார்.

ரொனால்டோ காயம்
author img

By

Published : Mar 26, 2019, 10:32 PM IST

2020ஆம் ஆண்டுக்கான யூரோ கால்பந்து தொடரின் தகுதிச் சுற்றுப் போட்டியில் நடைபெற்று வருகிறது. இதில், குரூப் பி பிரிவு ஆட்டத்தில், நடப்பு சாம்பியன் போர்ச்சுகல் அணி, செர்பியா அணியுடன் மோதியது.

ஆட்டத்தின் 7வது நிமிடத்திலேயே செர்பியா அணிக்கு பெனால்டி கிடைத்தது. இதை அந்த அணியின் துசான் தடிக் கோலாக மாற்றினார். இதைத்தொடர்ந்து, சிறப்பாக விளையாடிய போர்ச்சுகல் அணி ஆட்டத்தின் 42வது நிமிடத்தில் பதில் கோல் அடித்தது. அந்த அணியின் டேனிலோ பெரிரா கோல் அடித்தார். பின், இரு அணிகளும் கோல் அடிக்கும் வாய்ப்பை வீணாக்கினர். இறுதியில்ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

இதனிடையே, ஆட்டத்தின் 31ஆவது நிமிடத்தில் போர்ச்சுகல் அணியின் கேப்டனும் நட்சத்திர வீரருமான கிறிஸ்டியானோ ரொனால்டோவிற்கு காயம் ஏற்பட்டது. தனது காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டதால், அவர் ஆட்டத்தின் பாதியில் இருந்தே வெளியேறினார். இதனால், ஏப்ரல் 10 ஆம் தேதி அஜக்ஸ் அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் காலிறுதிப் போட்டியில், அவர் யுவெண்டஸ் அணிக்கு விளையாடுவாரா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.