இந்தியன் சூப்பர் லீக் எனப்படும் ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் ஐந்தாவது சீசன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதைத்தொடர்ந்து, இந்தத் தொடரின் இரண்டாம் கட்ட அரையிறுதிப் போட்டியில் பெங்களூரு எப்சி அணி, நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியுடன் மோதியது.
ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்தே இரு அணி வீரர்களும் கோல் அடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இருப்பினும் கோல் அடிக்காததால் முதல் பாதி கோலின்றி முடிந்தது.
இதைத்தொடர்ந்து, நடைபெற்ற இரண்டாம் பாதியில் பெங்களூரு அணி பந்தை அதிகம் பாஸ் செய்து விளையாடியது. இதன் பலனாக 72 வது நிமிடத்தில் பெங்களூரு அணியை சேர்ந்த மிகு கோல் அடித்து அசத்தினார். இதைத்தொடர்ந்து, களத்தில் ஆதிக்கம் செலுத்திய பெங்களூரு அணி 87வது நிமிடத்தில் அந்த அணியின் டிமாஸ் டெல்காடோ இரண்டாவது கோல் அடித்தார்.
இதனால், இந்தப் போட்டியில் பெங்களூரு அணியின் வெற்றி உறுதியான நிலையில், பெங்களூரு அணியின் கேப்டன் சுனில் செத்ரி ஆட்டத்தின் இறுதி கட்டத்தில் தன் பங்கிற்கு ஒரு கோல் அடித்து மிரட்டினார். இறுதியில் பெங்களூரு அணி 3-0 என்ற கோல் கணக்கில் நார்த்ஈஸ்ட் யுனைடெட் அணியை வீழ்த்தியது.
ஐஎஸ்எல்: இறுதி சுற்றில் பெங்களூரு!
Published 11-Mar-2019 22:32 IST
நன்றி: ISL twitter
ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் அரையிறுதிப் போட்டியில் பெங்களூரு எப்சி அணி 4-2 என்ற கோல் கணக்கில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியை வீழ்த்தி இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
இந்தியன் சூப்பர் லீக் எனப்படும் ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் ஐந்தாவது சீசன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதைத்தொடர்ந்து, இந்தத் தொடரின் இரண்டாம் கட்ட அரையிறுதிப் போட்டியில் பெங்களூரு எப்சி அணி, நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியுடன் மோதியது.
ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்தே இரு அணி வீரர்களும் கோல் அடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இருப்பினும் கோல் அடிக்காததால் முதல் பாதி கோலின்றி முடிந்தது.
இதைத்தொடர்ந்து, நடைபெற்ற இரண்டாம் பாதியில் பெங்களூரு அணி பந்தை அதிகம் பாஸ் செய்து விளையாடியது. இதன் பலனாக 72 வது நிமிடத்தில் பெங்களூரு அணியை சேர்ந்த மிகு கோல் அடித்து அசத்தினார். இதைத்தொடர்ந்து, களத்தில் ஆதிக்கம் செலுத்திய பெங்களூரு அணி 87வது நிமிடத்தில் அந்த அணியின் டிமாஸ் டெல்காடோ இரண்டாவது கோல் அடித்தார்.
இதனால், இந்தப் போட்டியில் பெங்களூரு அணியின் வெற்றி உறுதியான நிலையில், பெங்களூரு அணியின் கேப்டன் சுனில் செத்ரி ஆட்டத்தின் இறுதி கட்டத்தில் தன் பங்கிற்கு ஒரு கோல் அடித்து மிரட்டினார். இறுதியில் பெங்களூரு அணி 3-0 என்ற கோல் கணக்கில் நார்த்ஈஸ்ட் யுனைடெட் அணியை வீழ்த்தியது.
முன்னதாக, இவ்விரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் கட்ட அரையிறுதிப் போட்டியில் நார்த்ஈஸ்ட் யுனைடெட் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றனர்.
இதன்மூலம், இரண்டாம் கட்ட அரையிறுதிப் போட்டிகளையும் சேர்த்து பெங்களூரு அணி 4-2 என்ற கோல் வித்தியாசத்தில் தொடர்ந்து இரண்டாவது முறையாக இறுதி சுற்றுக்குள் நுழைந்துள்ளது.
இதைத்தொடர்ந்து, நாளை நடைபெறவுள்ள மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் எப்சி கோவா அணி, மும்பை சிட்டி எப்சி அணியுடன் மோதுகிறது. கோல் வித்தியாசத்தில் கோவா அணி 5-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இதனால், கோவா அணி இறுதிச் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என கால்பந்து நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.