ஐரோப்பாவின் முன்னணி அணிகள் பங்கேற்கும் யூரோ 2020 கால்பந்து தொடரின் காலிறுதி சுற்றின் முதல் போட்டியில் ஸ்பெயின் அணி சுவிட்சர்லாந்து அணியை எதிர்கொண்டது.
ஆட்டம் ஆரம்பத்த சில நிமிடங்களிலேயே ஸ்பெயின் அணிக்கு அதிர்ஷ்டம் அடித்தது. எட்டாவது நிமிடத்தில் சுவிட்சர்லாந்து அணி வீரர் டெனிஸ் சாகாரியா அடித்த ஓன் கோல் மூலம் ஸ்பெயின் கோல் கணக்கை தொடங்கியது.
ஸ்பெயினை திணறடித்த சுவிட்சர்லாந்து
முதல் பாதியில் 1-0 என்று ஸ்பெயின் முன்னிலை பெற்ற நிலையில், இரண்டாவது பாதியில் சுவிட்டர்லாந்து அணி தனது முதல் கோலைப் போட்டு ஆட்டத்தை சமன் செய்தது. சுவிட்சர்லாந்து அணி வீரர் ஷக்ரி அணிக்கு முதல் கோலைத் தேடித்தந்தார். பின்னர் இரு அணிகளும் எவ்வளவோ முயற்சி செய்தும் அதை கோலாகா மாற்ற முடியவில்லை.
ரெகுலர் ஆட்டத்தின் 90 நிமிடங்களுக்குப் பின் கூடுதலாக 30 நிமிடங்கள் ஆட்டம் நீட்டிக்கப்பட்ட போதிலும் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.
குறிப்பாக ஸ்பெயின் அணி மொத்த ஆட்ட நேரமான 120 நிமிடங்களில் கோலுக்காக 28 ஷாட்கள் அடித்த போதிலும், அதில் ஒன்று கூட கோலாக மாறவில்லை.
-
Every picture tells a story...
— UEFA EURO 2020 (@EURO2020) July 2, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Tough on Switzerland. Well played, Spain 👏👏👏#EURO2020 pic.twitter.com/p1pXBSfUbr
">Every picture tells a story...
— UEFA EURO 2020 (@EURO2020) July 2, 2021
Tough on Switzerland. Well played, Spain 👏👏👏#EURO2020 pic.twitter.com/p1pXBSfUbrEvery picture tells a story...
— UEFA EURO 2020 (@EURO2020) July 2, 2021
Tough on Switzerland. Well played, Spain 👏👏👏#EURO2020 pic.twitter.com/p1pXBSfUbr
அரையிறுதிக்கு முன்னேறிய ஸ்பெயின்
இறுதியில் பெனால்டி ஷூட் அவுட் முறையில் 3-1 என்ற கணக்கில் ஸ்பெயின் வெற்றிப்பெற்று அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியது. ஜூலை 7ஆம் தேதி நடைபெறும் அரையிறுதிப் போட்டியில் ஸ்பெயின்- இத்தாலி அணிகள் மோதுகின்றன.
இதையும் படிங்க: ஒலிம்பிக்கில் இந்திய அணியை வழிநடத்துகிறார் தமிழன் மாரியப்பன்