ETV Bharat / sports

ஜெர்மன் கால்பந்து தொடரில் பங்கேற்ற முதல் இந்தியர்! - Philip Coutinho hattrick in Bundesliga

வெர்டர் அணிக்கு எதிரான போட்டியின் மூலம்  பண்டஸ்லிகா தொடரில் பங்கேற்ற  முதல் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வீரர் என்ற பெருமையை பேயர்ன் முனிச் அணியின் வீரர் சர்பிரீத் சிங் பெற்றுள்ளார்.

Sarpreet Singh
Sarpreet Singh
author img

By

Published : Dec 15, 2019, 4:44 PM IST

ஜெர்மனியில் நடப்பு சீசனுக்கான பண்டஸ்லிகா கால்பந்து தொடர் நடைபெற்றுவருகிறது. இதில், நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பேயர்ன் முனிச் அணி 6-1 என்ற கோல் கணக்கில் வெர்டர் (Werder) அணியை பந்தாடியது.

பேயர்ன் முனிச்

இதில், ஆச்சரியம் என்னவென்றால், 24 நிமிடம் வரை முதல் கோல் பின்தங்கிய நிலையிலிருந்த பேயர்ன் அணி அதற்கு அடுத்து தங்களது சிறப்பான ஆட்டத்தால் கோல் மழை பொழிந்தது. குறிப்பாக, பேயர்ன் அணியின் நட்சத்திர முன்கள வீரர் ஃபிலிப் கோடின்ஹோ 45, 63, 79ஆவது ஆகிய நிமிடங்களில் ஹாட்ரிக் கோல் அடித்து மிரட்டினார்.

Sarpreet Singh
சர்பிரீத் சிங்

இப்போட்டியில் 82ஆவது நிமிடத்தில் பேயர்ன் வீரர் கோடின்ஹோவுக்கு பதிலாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 20 வயது இளம் நியூசிலாந்து வீரர் சர்பிரீத் சிங் களமிறங்கினார். இதன் மூலம், பண்டஸ்லிகா தொடரில் பங்கேற்ற முதல் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார்.

நடுகள வீரரான இவர், ஆஸ்திரேலியாவில் நடைபெறும் ஏ லீக் தொடரில் வெலிங்டன் ஃபீனிக்ஸ் அணிக்காக விளையாடிவந்தார். நடப்பு சீசனில் பேயர்ன் முனிச் அணிக்காக விளையாட ஒப்பந்தமானார்.

Sarpreet Singh
சர்பிரீத் சிங்

இதுமட்டுமல்லாமல், பண்டஸ்லிகா தொடரில் பங்கேற்ற இரண்டாவது நியூசிலாந்து வீரர் என்ற மற்றொரு பெருமையையும் சர்பிரீத் சிங் பெற்றுள்ளார். முன்னதாக, 1989 முதல் 1997வரை வெர்டர் அணிக்காக நியூசிலாந்து வீரர் வின்டான் ருஃபர் (Wynton Rufer) விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தேவைப்பட்டால் டிவில்லியர்ஸை அழைத்து வருவேன்' - தென் ஆப்பிரிக்க புதிய பயிற்சியாளர் பவுச்சர்

Intro:Body:

Sarpreet Singh becomes Bundesliga's first player of Indian descent

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.