ETV Bharat / sports

ஆண்டின் சிறந்த கால்பந்து வீரர் விருதை வென்றார் லெவாண்டோவ்ஸ்கி! - லியோனல் மெஸ்ஸி

இந்தாண்டின் சிறந்த கால்பந்து வீரருக்கான ஃபிஃபா விருதை போலந்து நாட்டின் நட்சத்திர வீரர் ராபர்ட் லெவாண்டோவ்ஸ்கி பெற்றுள்ளார்.

Robert Lewandowski clinches FIFA Best Men's Player award

author img

By

Published : Dec 18, 2020, 11:26 AM IST

ஆண்டுதோறும் சர்வதேச கால்பந்து கூட்டமைப்பால் உலகின் தலைசிறந்த வீரர்களைக் கௌரவிக்கும் ‘ஃபிஃபா கால்பந்து விளையாட்டில் சிறந்த வீரர்களுக்கான விருது’ வழங்கும் விழா, கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக டிசம்பர் 17ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

ஆண்டின் சிறந்த கால்பந்து வீரர் விருதை வென்றார் லெவாண்டோவ்ஸ்கி

இதையடுத்து நேற்று (டிச.17) காணொலி வாயிலாக நடைபெற்ற ஃபிஃபா கால்பந்து விருது வழங்கும் நிகழ்ச்சியில், இந்த ஆண்டின் சிறந்த கால்பந்து வீரருக்கான ஃபிஃபா விருதை போலந்து நாட்டின் நட்சத்திர வீரர் ராபர் லெவாண்டோவ்ஸ்கிக்கு வழங்கப்பட்டது. அதேசமயம் இந்த ஆண்டின் சிறந்த கால்பந்து வீராங்கனை விருதை இங்கிலாந்தின் லூசி புரான்ஸிற்கு வழங்கப்பட்டுள்ளது.

ஃபிஃபா விருதுகளும், வீரர்களின் பட்டியலும்

ஃபிஃபா ஆடவர் உலக லெவன் அணி:

அலிசன் பெக்கர் (பிரேசில்), ட்ரெண்ட்-அலெக்சாண்டர் அர்னால்டு (இங்கிலாந்து), செர்ஜியோ ராமோஸ் (ரியல் மாட்ரிட்), விர்ஜில் வான் டிஜ்க் (நெதர்லாந்து), அல்போசோ டேவிஸ் (கனடா), கெவின் டி ப்ரூயின் (பெல்ஜியம்), டியாகோ அல்காண்ட்ரா (ஸ்பெயின்), ஜோசுவா கிம்மிச் (ஜெர்மனி), லியோனல் மெஸ்ஸி (அர்ஜென்டினா), ராபர்ட் லெவாண்டோவ்ஸ்கி (போலந்து), கிறிஸ்டியானோ ரொனால்டோ (போர்ச்சுகல்).

ஃபிஃபா மகளிர் உலக லெவன் அணி:

கிறிஸ்டியன் எண்ட்லர் (சிலி); லூசி புரோன்ஸ் (இங்கிலாந்து), வெண்டி ரெனார்ட் (பிரான்ஸ்), மில்லி பிரைட் (இங்கிலாந்து), டெல்பின் காஸ்கரினோ (பிரான்ஸ்), பார்பரா போனான்சி (இத்தாலி), வெரோனிகா போக்கெட் (இத்தாலி), மேகன் ராபினோ (அமெரிக்கா) பெர்னில்லே ஹார்டர் (டென்மார்க்), விவியான் மிடெமா (நெதர்லாந்து), டோபின் ஹீத் (அமெரிக்கா).

இதையும் படிங்க:ஐஎஸ்எல்: சுனில் சேத்ரி சாதனை, பெங்களூரு அபார வெற்றி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.