ஸ்பெயினின் முன்னணி கால்பந்து லீகான ’லா லீகா’ தொடரின் முக்கிய போட்டியில் ரியல் மாட்ரிட் அணி வெலன்சியா அணியுடன் மோதியது. இந்த ஆட்டத்தின் முதல் பாதியில், இரு அணிகளும் கோலடிக்க கடும் முயற்சியில் ஈடுபட்டும் பலன் கிடைக்கவில்லை.
முதல் பாதியில் கோல் ஏதுவும் விழாத நிலையில், இரண்டாவது பாதியில் வெலன்சியா அணி முதல் கோலை அடித்து முன்னிலை பெற்றது. ஆட்டத்தின் 66ஆவது நிமிடத்தில் வெலன்சியா வீரர் ஹூகோ டுரோ ஆட்டத்தின் முதல் கோலை அடித்தார்.
தோல்வியை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த ரியல் மாட்ரிட் அணியை காக்கும் விதமாக அந்த அணி வீரர் வினிசியர் 86ஆவது நிமிடத்தில் கோல் அடித்தார். இதையடுத்து ஆட்டம் 1-1 என சமநிலைக்கு வந்தது.
அடுத்து இரு நிமிடங்களில் மற்றொரு முன்கள வீரரான கரீம் பென்சிமா ரியல் மாட்ரிட் அணிக்கு இரண்டாவது கோலை அடிக்க, 2-1 என்ற கோல் கணக்கில் ரியல் மாட்ரிட் வெற்றி பெற்றது.
-
💜 @vinijr and @Benzema strike late to give @realmadriden three golden points at Mestalla!
— LaLiga English (@LaLigaEN) September 19, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Enjoy the highlights from #ValenciaRealMadrid! 🍿 pic.twitter.com/bhHI8Cc8uH
">💜 @vinijr and @Benzema strike late to give @realmadriden three golden points at Mestalla!
— LaLiga English (@LaLigaEN) September 19, 2021
Enjoy the highlights from #ValenciaRealMadrid! 🍿 pic.twitter.com/bhHI8Cc8uH💜 @vinijr and @Benzema strike late to give @realmadriden three golden points at Mestalla!
— LaLiga English (@LaLigaEN) September 19, 2021
Enjoy the highlights from #ValenciaRealMadrid! 🍿 pic.twitter.com/bhHI8Cc8uH
இந்த வெற்றியின் மூலம் புள்ளிப் பட்டியலில் 13 புள்ளிகளுடன் ரியல் மாட்ரிட் அணி முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது. நடப்பு சாம்பியனான அட்லடிகோ மாட்ரிட் அணி 11 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.
இதையும் படிங்க: மீண்டும் கோலடித்த ரொனால்டோ: வெற்றிப்பாதையில் மேன்செஸ்டர் யுனைடெட்!