ETV Bharat / sports

இபிஎல்: லிவர்பூல் எஃப்சிக்கு அதிர்ச்சியளித்த எவர்டன்!

லிவர்பூல் - எவர்டன் அணிகளுக்கு இடையேயான இபிஎல் லீக் ஆட்டத்தில் எவர்டன் அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

Premier League: Everton defeat Liverpool to register first win at Anfield in 22 years

author img

By

Published : Feb 21, 2021, 3:22 PM IST

இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்து தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கிவருகிறது. இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் லிவர்பூல் எஃப்சி அணி - எவர்டன் அணியை எதிர்கொண்டது.

பரபரப்பான இப்போட்டியின் மூன்றாவது நிமிடத்திலேயே எவர்டன் அணியின் ரிச்சர்லிசன் கோலடித்து அணியை முன்னிலைப்படுத்தினார். இதன் மூலம் முதல் பாதி ஆட்டநேர முடிவில் எவர்டன் அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலைப் பெற்றது.

இதைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் பாதி ஆட்டத்திலும் சிறப்பாக விளையாடிய எவர்டன் அணி, லிவர்பூல் அணியில் கோலடிக்கும் முயற்சிகளை தகர்த்தது. பின்னர் ஆட்டத்தின் 83ஆவது நிமிடம் எவர்டன் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது.

இதனை சரியாகப் பயன்படுத்திய கில்ஃபி சிகுரஸன் அதனை கோலாக மாற்றி எவர்டன் அணியின் வெற்றியை உறுதி செய்தார். இதனால் ஆட்டநேர முடிவில் எவர்டன் அணி 2-0 என்ற கோல் கணக்கில் லிவர்பூல் எஃப்சியை வீழ்த்தி அபார வெற்றியை பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் எவர்டன் அணி இபிஎல் புள்ளிப் பட்டியலில் 40 புள்ளிகளுடன் ஏழாவது இடத்திற்கு முன்னேறியது.

இதையும் படிங்க: விஜய் ஹசாரே கோப்பை : தமிழ்நாடு அணி வெற்றி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.