ETV Bharat / sports

கால்பந்து: நெதர்லாந்தை வீழ்த்தி பட்டம் வென்ற போர்ச்சுகல்!

author img

By

Published : Jun 10, 2019, 8:03 AM IST

ஸ்பெயின்: யூ.ஈ.எஃப்.ஏ. நேஷன்ஸ் லீக் தொடரின் இறுதி ஆட்டத்தில் நெதர்லாந்து அணியை வீழ்த்தி போர்ச்சுகல் அணி கோப்பையைக் கைப்பற்றியது.

ரொனால்டோ

2018-19 ஆண்டுக்கான யூ.ஈ.எஃப்.ஏ. நேஷன்ஸ் லீக் தொடர் இறுதி ஆட்டத்தில் போர்ச்சுகல் அணியை எதிர்த்து நெதர்லாந்து அணி விளையாடியது. இதில் முதல் பாதி தொடங்கியது முதலே ஆட்டத்தை தன் கட்டுப்பாட்டில் போர்ச்சுகல் அணி எடுத்துக்கொண்டது. 11ஆவது நிமிடத்தில் போர்ச்சுகல் அணிக்கு கிடைத்த கார்னர் வாய்ப்பை அந்த அணியின் புரூனோ ஃபெர்னாண்டஸ் வீணடிக்க, நெதர்லாந்து அணியின் தடுப்பாட்டம் போர்ச்சுகல் அணி வீரர்கள் முன் பலிக்காமல் போனது.

இதனையடுத்து ஆட்டத்தின் 28ஆவது நிமிடத்தில் போர்ச்சுகல் அணியின் சில்வா அடித்த கார்னர் ஷாட்டை ஜோஸ் தனது தலையில் முட்டி கோலாக்க முயன்றதை நெதர்லாந்து அணி கோல் கீப்பர் தடுத்தார். இதனையடுத்து இரு அணிகளும் கோல் அடிக்க எடுத்த முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை. முதல் பாதி ஆட்டம் கோல் இல்லாமல் முடிந்தது.

ரொனால்டோ
ரொனால்டோ

இதனையடுத்து நடைபெற்ற இரண்டாம் பாதி ஆட்டத்தில் போர்ச்சுகல் அணி ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் ஆட்டத்தின் 60ஆவது நிமிடத்தில் போர்ச்சுகல் அணியின் கோன்கோலோ (goncolo) முதல் கோல் அடித்து போர்ச்சுகல் அணிக்கு முன்னிலை ஏற்படுத்தினார்.

கோன்காலோ
கோன்கோலோ

மேலும் கோல்கள் விழாத நிலையில், இரண்டாம் பாதி ஆட்டம் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து மூன்று நிமிடங்கள் கூடுதல் நேரம் வழங்கப்பட்ட நிலையில், ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எகிறியது. ஆனால் அந்த நிமிடத்தில் கோல்கள் விழவில்லை என்பதால் போர்ச்சுகல் அணி 1-0 என நெதர்லாந்து அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.

போர்சுகல்
போர்ச்சுகல்

இதனால் முதன்முறையாக யூ.ஈ.எஃப்.ஏ. நேஷன்ஸ் லீக் கோப்பைக் கைப்பற்றி போர்ச்சுகல் அணி சாதனைப் படைத்தது.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.