ETV Bharat / sports

போக்பாவுக்கு மான்செஸ்டரின் நிலை நிச்சயம் கவலையளிக்கும்: பிரான்ஸ் பயிற்சியாளர் டிடியர்

பாரிஸ்: மான்செஸ்டர் யுனைடெட் அணியின் தற்போதைய நிலையைப் பற்றி பவுல் போக்பா கவலைப்படுவார் என பிரான்ஸ் கால்பந்து அணியின் பயிற்சியாளர் டிடியர் தேஷ்சேம்ப்ஸ் தெரிவித்துள்ளார்.

paul-pogba-cant-be-happy-at-man-utd
paul-pogba-cant-be-happy-at-man-utd
author img

By

Published : Nov 10, 2020, 7:31 PM IST

ப்ரீமியர் லீக் தொடரில் மான்செஸ்டர் யுனைடெட் அணி 7 போட்டிகளில் ஆடி 3இல் வெற்றி, 3இல் தோல்வி, 1இல் டிரா செய்து 10 புள்ளிகளுடன் 14ஆவது இடத்தில் உள்ளது. இந்த 7 போட்டிகளிலும் நட்சத்திர வீரர் பவுல் போக்பா, இரண்டு போட்டிகளில் மட்டுமே 90 நிமிடங்கள் முழுமையாக களத்தில் இருந்துள்ளார்.

இதைப்பற்றி பிரான்ஸ் அணியின் பயிற்சியாளர் டிடியர்ட் கூறுகையில், ''அவருக்கு என்னிடம் எந்த அறிவுரையும் இல்லை. மான்செஸ்டர் யுனைடெட்டின் தற்போதைய நிலை குறித்து நிச்சயம் அவரால் தன்னிறைவு அடைய முடியாது. அவருக்கு சரியான நேரமாக இப்போது இல்லை. அவரின் அணியைப் பற்றி நிச்சயம் நன்றாக தெரியும்.

இந்தத் தொடரின்போது அவருக்கு முதலில் காயம். பின்னர் கரோனா பாதிப்பு என ஏராளமான பிரச்னைகள் ஏற்பட்டுள்ளது. அதனால் அவர் மீண்டும் பழைய ஃபார்மிற்கு திரும்ப வேண்டும்.

பிரான்ஸ் பயிற்சியாளர் டிடியர்
பிரான்ஸ் பயிற்சியாளர் டிடியர்

கடந்த மாதத்தில் இவரின் ஆட்டம் நன்றாகவும், கன்சிஸ்டெண்ட்டாகவும் இருந்தது. ஆனால் அவரிடம் வேகம் குறைவாக இருந்தது. ஆனால் அவருக்கு அது மகிழ்ச்சியாக இருக்காது. எனக்கும் அவருக்கும் எவ்வித பிரச்னையும் இல்லை. என்னால் மீண்டும் அவருக்கு பயிற்சியளிக்க முடியும். ஆனால் ஒரு வீரராக இது எளிதான சூழல் இல்லை. அவரிடம் நிச்சயம் பேசுவேன். அவர் எவ்வாறு உணர்கிறார் என்பதை என்னிடம் பகிர்ந்துகொள்வார். எனக்கும் தெரிந்த சில விஷயங்களை நிச்சயம் கூறுவேன்'' என்றார்.

இதையும் படிங்க: ஐபிஎல் இறுதிப்போட்டி: டாஸ் வென்ற டெல்லி... பேட்டிங்கைத் தேர்வு செய்த ஸ்ரேயாஸ்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.