ETV Bharat / sports

#FIFAFootballAwards: இது ஆறாவது முறை - உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர் மெஸ்சி

author img

By

Published : Sep 24, 2019, 3:41 PM IST

மிலன்: உலகின் தலைசிறந்த கால்பந்து வீரருக்கான விருது பார்சிலோனா அணி வீரர் மெஸ்ஸிக்கு வழங்கப்பட்டது.

#FIFAFootballAwards

உலக கால்பந்து கூட்டமைப்பு சங்கம் சார்பில் நடத்தப்படும் கால்பந்து வீரர்களுக்கான விருது இந்தாண்டு இத்தாலி நாட்டிலுள்ள மிலன் நகரில் நடத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பார்சிலோனா அணிக்காக விளையாடிவரும் நட்சத்திர கால்பந்து வீரர் மெஸ்ஸிக்கு ஆறாவது முறையாக உலகின் தலைசிறந்த கால்பந்து வீரருக்கான விருது வழங்கப்பட்டது.

இதன் மூலம் அதிக கால்பந்து விருதுகளைக் கைபற்றிய வீரர்கள் வரிசையில் போர்ச்சுகல் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவை பின்னுக்குத் தள்ளி மெஸ்ஸி முதலிடத்தைப் பிடித்துள்ளார்

#FIFAFootballAwards
தலைசிறந்த கால்பந்து வீரர் & வீராங்கனை விருதை வென்ற மெஸ்ஸி, மேகன் ராபினோவ்

மெஸ்ஸி 2009, 2010, 2011, 2012, 2015, 2019 ஆண்டுகளில் தலைசிறந்த கால்பந்து வீரருக்கான விருததை கைப்பற்றியுள்ளார். போர்ச்சுகலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ 2008, 2013, 2014, 2016, 2017ஆம் ஆண்டுகளில் இந்த விருதைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் உலகின் தலைசிறந்த கால்பந்து வீராங்கனைக்கான விருது அமெரிக்காவின் மேகன் ராபினோ தட்டிச்சென்றார். சிறந்த கோல் கீப்பருக்கான விருதை பிரேசில் அணியின் அலிசன் பெக்கர் கைப்பற்றினார்.

Intro:Body:

Fifa Football awards

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.