16 வயதுக்குட்பட்டோருக்கான ஏ.எஃப்.சி. ஆசிய சாம்பியன்ஷிப் கால்பந்து தொடர் உஸ்பேகிஸ்தான் நாட்டில் நடைபெற்றுவருகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், குவைத் உள்ளிட்ட 44 அணிகள், 11 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்திய அணியானது பஹ்ரைன், உஸ்பேகிஸ்தான், துருக்மெனிஸ்தான் உள்ளிட்ட அணிகளுடன் பி பிரிவில் இடம்பெற்றுள்ளது. இந்தத் தொடர் ரவுண்ட் ராபின் முறையில் நடைபெறுகிறது.
இந்நிலையில், நேற்று நடைபெற்ற குரூப் பி பிரிவுக்கான போட்டியில் இந்திய அணி, துருக்கமேனிஸ்தானை எதிர்கொண்டது. தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி, சீரான இடைவெளியில் கோல்களை அடித்தது. ஆட்டநேர முடிவில், இந்திய அணி 5-0 என்ற கணக்கில் அபார வெற்றியுடன் இந்தத் தொடரை தொடங்கியுள்ளது. இந்திய அணி தரப்பில் சுபோ பவுல், தாய்சாங் சிங், ஸ்ரீதர், ஹிமான்சூ ஆகியோர் கோல் அடித்தனர்.