2022ஆம் ஆண்டுக்கான ஃபிஃபா உலகக்கோப்பைக் கால்பந்து தொடரின் தகுதிச் சுற்றுப் போட்டியில் பெரு அணியை பிரேசில் அணி எதிர்கொண்டது. அதில் பிரேசில் அணி 4-2 என்ற கோல்கணக்கில் வெற்றிபெற்றது. அந்த 4 கோல்களில் 2 கோல்களை நட்சத்திர வீரர் நெய்மார் அடித்திருந்தார். இதன் மூலம் பிரேசில் அணிக்காக நெய்மார் அடித்த கோல்களின் எண்ணிக்கை 64ஆக உயர்ந்தது.
இதனால் நட்சத்திர வீரர் ரொனால்டோ 62 கோல்கள் அடித்த சாதனையை நெய்மார் முறியடித்தார். பிரேசில் தேசிய அணிக்காக அதிக கோல்கள் அடித்தவர்கள் பட்டியலில் கால்பந்து ஜாம்பவான் பீலே 77 கோல்களுடன் முதலிடத்தில் உள்ளார்.
இவருக்கு அடுத்த இடத்தில் நெய்மார் இரண்டாவது இடத்தில் உள்ளார். ஆகஸ்ட் மாதத்தில் நெய்மாரை முன்னாள் பிரேசில் கோல்கீப்பர் டஃபேரெல் சூப்பர் ஸ்டார் எனவும், நிச்சயம் அவர் மீண்டும் பிரேசில் அணிக்காக உலகக்கோப்பையை வென்று கொடுப்பார் எனவும் தெரிவித்திருந்தார்.
-
Todo meu respeito por ti FENÔMENO @Ronaldo 👆🏽👉🏽👇🏽☝🏽 pic.twitter.com/xDhdPieeSD
— Neymar Jr (@neymarjr) October 14, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Todo meu respeito por ti FENÔMENO @Ronaldo 👆🏽👉🏽👇🏽☝🏽 pic.twitter.com/xDhdPieeSD
— Neymar Jr (@neymarjr) October 14, 2020Todo meu respeito por ti FENÔMENO @Ronaldo 👆🏽👉🏽👇🏽☝🏽 pic.twitter.com/xDhdPieeSD
— Neymar Jr (@neymarjr) October 14, 2020
இதையும் படிங்க:ரொனால்டோவுக்கு கரோனா உறுதி!