ETV Bharat / sports

ஐஎஸ்எல் : நெவிலின் இறுதி நிமிட கோலால் தோல்வியைத் தவிர்த்த ஈஸ்ட் பெங்கால்! - கேரளா பிளாஸ்டர்ஸ்

ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் கேரளா பிளாஸ்டர்ஸ் - ஈஸ்ட் பெங்கால் அணிகளுக்கு இடையே நேற்று (ஜன.15) நடைபெற்ற லீக் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந்தது.

Neville secures draw for SC East Bengal with late equaliser against Kerala

author img

By

Published : Jan 16, 2021, 7:27 AM IST

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் லீக் போட்டிகள் தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளன. இதில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி - ஈஸ்ட் பெங்கால் எஃப்சி அணியை எதிர்கொண்டது.

பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியின் தொடக்கம் முதலே இரு அணிகளும் தங்களது வலிமையான டிஃபென்ஸ் ஆட்டத்தை வெளிப்படுத்த தொடங்கின. இதனால் முதல் பாதி ஆட்டம் கோல் ஏதுமின்றி சமநிலையில் முடிந்தது.

தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் பாதி ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய கேரளா பிளாஸ்டர்ஸ் அணிக்கு ஜோர்டன் முர்ரே ஆட்டத்தின் 64ஆவது நிமிடத்தில் கோலடித்து அணியின் கோல் கணக்கைத் தொடங்கிவைத்தார்.

அதன்பின் ஆட்டத்தின் இறுதிவரை போராடிய ஈஸ்ட் பெங்கால் அணிக்கு, கூடுதல் நேரமான 90+5ஆவது நிமிடத்தில் ஸ்காட் நெவில் கோலடித்து நூழிலையில் அணியை தோல்வியிலிருந்து மீட்டார்.

இதனால் ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்ததால், ஆட்டம் டிராவில் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க: டெஸ்ட் போட்டியைக் காண தவமிருந்த ரசிகர்; இறுதியில் ரசிகருக்கு நேர்ந்த சோகம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.