கோவிட்-19 பெருந்தொற்றுக் காரணமாக உலகம் முழுவதும் பல்வேறு வகையான விளையாட்டுப் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. மேலும், இந்தியாவில் நடைபெறயிருந்த ஐபிஎல் தொடர், ஐ-லிக் தொடர்களும் ஒத்திவைக்கப்பட்டன.
இந்நிலையில், இந்திய கால்பந்து கூட்டமைப்பின்(ஏ.ஐ.எஃப்.எஃப்) ஐ-லீக் தொடர் குறித்த காணொலி கூட்டம் நேற்று (ஏப்ரல் 18) நடைபெற்றது. இக்கூட்டத்தில் இந்திய கால்பந்து கூட்டமைப்பின் தலைவர், ஐ-லிக் தொடரின் நிர்வாகிகள் என அனைவரும் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் கரோனா வைரஸ் தொற்றால் ஐ-லீக் தொடரில் ஏற்பட்டுள்ள பல்வேறு வகையான பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.
-
League Committee sends its recommendations to the AIFF Executive Committee
— Indian Football Team (@IndianFootball) April 18, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
Read more ➡️ https://t.co/hYVXhgfI48#IndianFootball ⚽ #LeagueForAll 🤝 pic.twitter.com/NyCnUtOExf
">League Committee sends its recommendations to the AIFF Executive Committee
— Indian Football Team (@IndianFootball) April 18, 2020
Read more ➡️ https://t.co/hYVXhgfI48#IndianFootball ⚽ #LeagueForAll 🤝 pic.twitter.com/NyCnUtOExfLeague Committee sends its recommendations to the AIFF Executive Committee
— Indian Football Team (@IndianFootball) April 18, 2020
Read more ➡️ https://t.co/hYVXhgfI48#IndianFootball ⚽ #LeagueForAll 🤝 pic.twitter.com/NyCnUtOExf
இது குறித்து இந்திய கால்பந்து கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐ-லீக் தொடர் குறித்த இக்கூட்டத்தில் 2019-20ஆம் ஆண்டிற்கான சீசனை முழுவதுமாக கைவிடுவதாக முடிவுசெய்யப்பட்டுள்ளது. மேலும் தற்போது வரை நடைபெற்ற போட்டிகளின் புள்ளிப்பட்டியல் அடிப்படையில் இந்த சீசனுக்கான சாம்பியனாக மோகன் பாகன் அணி ஒருமனதாக தேர்வு செய்யப்படுகிறது என்று அறிவித்துள்ளது.
-
Mohun Bagan - @ILeagueOfficial Champions 2019-2020.#Champion5 #JoyMohunbagan #DreamBigSupportFearlessly #DreamComesTrue pic.twitter.com/0yWHt6t405
— Mohun Bagan (@Mohun_Bagan) March 10, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Mohun Bagan - @ILeagueOfficial Champions 2019-2020.#Champion5 #JoyMohunbagan #DreamBigSupportFearlessly #DreamComesTrue pic.twitter.com/0yWHt6t405
— Mohun Bagan (@Mohun_Bagan) March 10, 2020Mohun Bagan - @ILeagueOfficial Champions 2019-2020.#Champion5 #JoyMohunbagan #DreamBigSupportFearlessly #DreamComesTrue pic.twitter.com/0yWHt6t405
— Mohun Bagan (@Mohun_Bagan) March 10, 2020
மேலும் இந்தியாவில் நடைபெற்று வந்த சப்-ஜூனியர் லீக், ஜூனியர் லீக், எலைட் லீக், அண்டர்-17 லீக், கேலோ இந்திய மகளிர் லீக் ஆகிய அனைத்து கால்பந்து தொடர்களும் கைவிடப்படுவதாகவும், 2020-21 சீசனில் இந்த அனைத்து தொடர்களும் நடைபெறும் என்றும் இந்திய கால்பந்து கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
இதையும் படிங்க:ஸ்டோக்ஸ் என்னை 'மேங்கோ மேன்' என அழைப்பார் - உனாத்கட் ஓபன் டாக்!