அர்ஜென்டினாவைச் சேர்ந்த லியோனல் மெஸ்ஸி கால்பந்து விளையாட்டில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்திவருகிறார். இதனிடையே தற்போது பார்சிலோனோ கிளப் அணிக்காக லா லிகா தொடரில் விளையாடிவரும் அவர் மற்றுமொரு சாதனையைப் படைத்திருக்கிறார்.
லா லிகா தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் மெஸ்ஸி தலைமையிலான பார்சிலோனா அணி அலாவ்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடியது. இப்போட்டியில் 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய நடப்பு சாம்பியனான பார்சிலோனா அணி புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.
-
Leo #Messi has scored at least 5️⃣0️⃣ goals (club & country) in 9 of the last 10 calendar years!
— FC Barcelona (@FCBarcelona) December 21, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
2010 6️⃣0️⃣
2011 5️⃣9️⃣
2012 9️⃣1️⃣ 🤯
2013 4️⃣5️⃣
2014 5️⃣8️⃣
2015 5️⃣2️⃣
2016 5️⃣9️⃣
2017 5️⃣4️⃣
2018 5️⃣1️⃣
2019 5️⃣0️⃣
🐐 pic.twitter.com/2bMEslMEro
">Leo #Messi has scored at least 5️⃣0️⃣ goals (club & country) in 9 of the last 10 calendar years!
— FC Barcelona (@FCBarcelona) December 21, 2019
2010 6️⃣0️⃣
2011 5️⃣9️⃣
2012 9️⃣1️⃣ 🤯
2013 4️⃣5️⃣
2014 5️⃣8️⃣
2015 5️⃣2️⃣
2016 5️⃣9️⃣
2017 5️⃣4️⃣
2018 5️⃣1️⃣
2019 5️⃣0️⃣
🐐 pic.twitter.com/2bMEslMEroLeo #Messi has scored at least 5️⃣0️⃣ goals (club & country) in 9 of the last 10 calendar years!
— FC Barcelona (@FCBarcelona) December 21, 2019
2010 6️⃣0️⃣
2011 5️⃣9️⃣
2012 9️⃣1️⃣ 🤯
2013 4️⃣5️⃣
2014 5️⃣8️⃣
2015 5️⃣2️⃣
2016 5️⃣9️⃣
2017 5️⃣4️⃣
2018 5️⃣1️⃣
2019 5️⃣0️⃣
🐐 pic.twitter.com/2bMEslMEro
இந்தப் போட்டியின் 69ஆவது நிமிடத்தில் ஒரு கோல் அடித்த மெஸ்ஸி, 2019ஆம் ஆண்டு ஒட்டுமொத்தமாக 50 கோல்களை நிறைவு செய்தார். அர்ஜென்டினா, பார்சிலோனா ஆகிய இரண்டு அணிகளுக்கும் சேர்த்து அவர் 50 கோல்களை அடித்துள்ளார்.
இதன்மூலம் தொடர்ச்சியாக ஆறாவது ஆண்டாக மெஸ்ஸி 50 கோல்களை நிறைவுசெய்து சாதனைப் படைத்துள்ளார். கடந்த பத்து ஆண்டுகளில் 2013ஆம் ஆண்டை தவிர்த்து அனைத்து ஆண்டுகளிலும் மெஸ்ஸி 50 கோல்களுக்கு மேல் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.