ETV Bharat / sports

லா லிகா சாம்பியன் பட்டத்தை தக்கவைத்தது பார்சிலோனா! - லா லிகா

லா லிகா கால்பந்து போட்டியில், நடப்பு சாம்பியன் பார்சிலோனா அணி 1-0 என்ற கோல் கணக்கில் லெவாண்டே அணியை வீழ்த்தி லா லிகா சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துள்ளது.

லா லிகா சாம்பியன் பட்டத்தை தக்கவைத்தது பார்சிலோனா!
author img

By

Published : Apr 28, 2019, 6:26 PM IST

ஸ்பெயின் நாட்டில் லா லிகா கால்பந்து தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், பார்சிலோனாவின் கேம்ப் நெள மைதானத்தில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் பார்சிலோனா அணி, லெவாண்டே (Levante) அணியை எதிர்கொண்டது.

இப்போட்டியில், இரண்டாம் பாதியில் மாற்று வீரராக வந்த பார்சிலோனா அணியின் கேப்டன் மெஸ்ஸி 62ஆவது நிமிடத்தில் அசத்தலான கோல் அடித்தார். இதனால், பார்சிலோனா அணி 1-0 என்ற கோல் கணக்கில் லெவாண்டே அணியை வீழ்த்தியது.

இந்த வெற்றியின் மூலம் பார்சிலோனா அணி இந்தத் தொடரில் விளையாடிய 35 போட்டிகளில், 25 வெற்றி, 8 டிரா, 2 தோல்வி என 83 புள்ளிகளை பெற்று முதலிடத்தில் நீடிக்கிறது. அவர்ளுக்கு அடுத்தப்படியாக, அத்லெடிக்கோ மேட்ரிட் அணி 35 போட்டிகளில் 22 வெற்றி, 8 டிரா, 5 தோல்வி என 74 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.

Messi
மெஸ்ஸி

இதனால் புள்ளிகள் அடிப்படையில் பார்சிலோனா முதலிடத்தில் உள்ளதால், லா லிகா சாம்பியன் பட்டத்தை 26ஆவது முறையாக வென்றுள்ளது. கடந்த 11 ஆண்டுகளில் பார்சிலோனா அணி 8 முறை லா லிகா கோப்பையை கைப்பற்றி, லா லிகா தொடரில் மற்ற அணிகளுக்கு சிம்மசொப்பனமாக திகழ்கிறது. அதைத்தவிர, பார்சிலோனா அணியின் முழு நேர கேப்டனாக பொறுப்பேற்ற மெஸ்ஸி, முதல் சீசனிலேயே லா லிகா கோப்பையை வென்றதால் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.