ஸ்பெயின் நாட்டின் புகழ்பெற்ற கால்பந்து தொடரான லாலிகா கால்பந்து தொடர் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இத்தொடரில் நேற்று (டிச.20) நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பார்சிலோனா எஃப்சி அணி - வலென்சியா எஃப்சி அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது.
டிராவில் முடிந்த ஆட்டம்:
பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியின் முதல் பாதி ஆட்டத்தின் 29ஆவது நிமிடத்தில் வலென்சியா அணியின் மூக்டர் டயகாபி கோலடித்து அசத்தினார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பார்சிலோனா அணியின் கேப்டன் மெஸ்ஸி ஆட்டத்தின் 45+4ஆவது நிமிடத்தில் கோலடித்தார். இதனால் முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்து சமநிலையில் இருந்தது.
தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் பாதி ஆட்டத்தின் 52ஆவது நிமிடத்தில் பார்சிலோனா அணியின் ரொனால்ட் அசத்தலான கோலை அடித்து அணியை முன்னிலைப்படுத்தினார். இருப்பினும் ஆட்டத்தின் 69ஆவது நிமிடத்தில் வலென்சியா அணியின் கொமெஸ் கோலடிக்க, ஆட்டம் சமநிலையில் முடிந்தது. இதனால் ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் தலா 2 கோல்களை அடித்ததால், ஆட்டம் டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.
பீலே சாதனையை சமன் செய்த மெஸ்ஸி:
இப்போட்டியில் பார்சிலோனா அணியின் கேப்டன் மெஸ்ஸி கோலடித்ததன் மூலம், பார்சிலோனா அணிக்காக தனது 643ஆவது கோலை பதிவுசெய்து அசத்தினார்.
இதன் மூலம் ஒரு அணிக்காக விளையாடி அதிக கோல்களை அடித்த வீரர் என்ற பீலேவின் சாதனையை சமன் செய்தார். பிரேசில் அணியின் பீலே, சீரி ஏ தொடரின் சாண்டோஸ் எஃப்சி அணிக்காக 643 கோல்களை அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
🐐 G . O . A . T .
— FC Barcelona (@FCBarcelona) December 19, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
⚽ 6️⃣4️⃣3️⃣
🔝 @officialpes pic.twitter.com/ZlN7KYNreV
">🐐 G . O . A . T .
— FC Barcelona (@FCBarcelona) December 19, 2020
⚽ 6️⃣4️⃣3️⃣
🔝 @officialpes pic.twitter.com/ZlN7KYNreV🐐 G . O . A . T .
— FC Barcelona (@FCBarcelona) December 19, 2020
⚽ 6️⃣4️⃣3️⃣
🔝 @officialpes pic.twitter.com/ZlN7KYNreV
இதையும் படிங்க:பிஎன்சி சாம்பியன்ஷிப் தொடரில் அறிமுகமான இளம் வயது வீரர்!