ETV Bharat / sports

ரொனால்டோவை விட மெஸ்ஸியே சிறந்தவர் - டேவிட் பெக்காம்! - கிறிஸ்டியானோ ரோனால்டோ

முன்னாள் மான்செஸ்டெர் யுனைடெட், ரியல் மாட்ரீட் அணியின் நட்சத்திர வீரர் டேவிட் பெக்காம், கால்பந்து விளையாட்டில் ரொனால்டோவை விட லியோனல் மெஸ்ஸியே சிறந்தவர் என கருத்து தெரிவித்துள்ளார்.

Messi a level above Ronaldo: David Beckham

author img

By

Published : Apr 19, 2020, 5:55 PM IST

இங்கிலாந்து கால்பந்து அணியின் தலைசிறந்த வீரராக வலம் வந்தவர், டேவிட் பெக்காம். இவர் மான்செஸ்டர் யுனைடெட், ரியல் மாட்ரீட் அணிகளுக்காக பல போட்டிகளில் விளையாடி சாதனைப் படைத்தவர். மேலும் இவரது காலத்தில், கிறிஸ்டியானோ ரொனால்டோ பயன்படுத்திய 7ஆம் நம்பர் ஜெர்சியை அணிந்தவர் இவரே ஆவர்.

இந்நிலையில் தற்போதுள்ள கால்பந்தாட்டத்தில், சிறந்த வீரராக வலம் வருபவர் யார் என்பதை மதிப்பிடும் முயற்சியில் இறங்கிய டேவிட் பெக்காம் அதற்கான விடையையும் தனது ட்விட்டர் பக்கத்தில் அளித்துள்ளார்.

அதில், லியோனல் மெஸ்ஸி தனது விளையாட்டில் தனித்துவம் வாய்ந்தவராக இருக்கிறார். மேலும் அவரைப் போல, மற்றொரு வீரர் இருப்பது சாத்தியமில்லை. ஆனால், கிறிஸ்டியானோ ரொனால்டோ, மெஸ்ஸியைப் போன்றவர் கிடையாது. மேலும் மற்ற வீரர்கள் எல்லாம் இவர்களுக்குக் கீழ் உள்ள இடங்களைப் பிடித்துள்ளனர் எனப் பதிவிட்டுள்ளார்.

இதன் மூலம் இங்கிலாந்தின் டேவிட் பேக்காம், தற்போதுள்ள கால்பந்தாட்டத்தில் ரொனால்டோவை விட, லியோனல் மெஸ்ஸியே சிறந்தவர் எனத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:பீட்டர்சன்னின் ட்விட்டர் சேட்டைக்கு பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.