நடப்பு சீசனுக்கான இங்கிலிஷ் ப்ரீமியர் லீக் கால்பந்து தொடரின் நேற்றைய லீக் போட்டியில் மான்செஸ்டர் யுனைடெட் - மான்செஸ்டர் சிட்டி அணிகள் மோதின. மான்செஸ்டர் யுனைடெட் அணியின் சொந்த மைதானமான ஓல்ட் டிராஃபர்டில் நடைபெற்ற இப்போட்டியில் மான்செஸ்டர் சிட்டி அணி வழக்கம் போல பந்தை அதிகம் பாஸ் செய்து விளையாடின.
இதனால், அவர்களுக்கு கோல் அடிக்க பல வாய்ப்புகள் கிடைத்தாலும் மோசமான ஃபினிஷிங்கால் கோலாக்க முடியாமல் போனது. இதனிடையே, 30ஆவது நிமிடத்தில் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு ஃப்ரீகிக் வழங்கப்பட்டது. மான்செஸ்ட் யுனைடெட் வீரர் பியூரான் ஹென்ட்ரிக்ஸின் லாப் (Lob) செய்ய, சக வீரர் மார்ஷியல் அசத்தலான கோல் அடித்தார்.
-
𝓜𝓪𝓷𝓬𝓱𝓮𝓼𝓽𝓮𝓻 𝓲𝓼 𝓡𝓮𝓭, 2019/20: 𝓟𝓽 𝓘𝓘𝓘#MUFC #MUNMCI pic.twitter.com/jSBJ29iBvh
— Manchester United (@ManUtd) March 8, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">𝓜𝓪𝓷𝓬𝓱𝓮𝓼𝓽𝓮𝓻 𝓲𝓼 𝓡𝓮𝓭, 2019/20: 𝓟𝓽 𝓘𝓘𝓘#MUFC #MUNMCI pic.twitter.com/jSBJ29iBvh
— Manchester United (@ManUtd) March 8, 2020𝓜𝓪𝓷𝓬𝓱𝓮𝓼𝓽𝓮𝓻 𝓲𝓼 𝓡𝓮𝓭, 2019/20: 𝓟𝓽 𝓘𝓘𝓘#MUFC #MUNMCI pic.twitter.com/jSBJ29iBvh
— Manchester United (@ManUtd) March 8, 2020
இதன்பின் மான்செஸ்டர் சிட்டி அணியின் முன்கள வீரர்களான செர்ஜியா ஆகுவேரா, ஸ்டெர்லிங், கெப்ரியல் ஜிசஸ் ஆகியோரால் மான்செஸ்டர் யுனைடெட் அணியின் தடுப்பாட்டத்தைக் கடந்து கோல் அடிக்க முடியாமல் தவித்தனர். ஆட்டம் 90 நிமிடங்கள் எட்டிய நிலையில், கூடுதலாக ஆறு நிமிடங்கள் வழங்கப்பட்டன.
இதையடுத்து, ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் மான்செஸ்டர் சிட்டி அணியின் கோல்கீப்பர் எடர்சன் செய்த தவறால், மான்செஸ்டர் யுனைடெட் வீரர் ஸ்காட் மெக்டோமினே கோல் அடித்தார். இதனால், மான்செஸ்டர் யுனைடெட் அணி 2-0 என்ற ோகல் கணக்கில் மான்செஸ்ட்ர் சிட்டி அணியை வீழ்த்தியது.
இந்த வெற்றியின்மூலம், மான்செஸ்டர் யுனைடெட் அணி 45 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. மறுமுனையில், மான்செஸ்டர் சிட்டி அணி 57 புள்ளிகளுடன் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் நீடிக்கிறது.
இதையும் படிங்க: பெங்களூருவை வீழ்த்தி மூன்றாவது முறையாக இறுதிப்போட்டியில் ஏடிகே!