ETV Bharat / sports

ரியல் மாட்ரிட்டை வீழ்த்திய மான்செஸ்டர் சிட்டி

ஐரோப்பா சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் முதல் நாக் அவுட் போட்டியில் மான்செஸ்டர் சிட்டி அணி 2-1 என்ற கோல் கணக்கில் முன்னாள் சாம்பியன் ரியல் மாட்ரிட் அணியை வீழ்த்தியது.

manchester City defeated Real Madrid by 2-1 in UCL

author img

By

Published : Feb 28, 2020, 6:51 AM IST

2019-20 ஆண்டுக்கான ஐரோப்பா சாம்பியன்ஸ் லீக் தற்போது நாக் அவுட் சுற்றை எட்டியுள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் சன்டிகோ பெர்னாபுவில் (மாட்ரிட்) நடைபெற்ற முதல் நாக் அவுட் போட்டியில் முன்னாள் சாம்பியன் ரியல் மாட்ரிட் அணி, மான்செஸ்டர் சிட்டி அணியுடன் மோதியது.

ஆட்டம் தொடங்கியதிலிருந்தே இரு அணிகளும் முதல் பாதியில் அட்டாக்கிங் முறையில் விளையாடின. இதனால், கோல் அடிக்க பல வாய்ப்புகள் கிடைத்தாலும் ஃபினிஷிங் சரியில்லாததால் இரு அணிகளாலும் கோல் அடிக்க முடியவில்லை.

இந்த நிலையில், ஆட்டத்தின் 60ஆவது நிமிடத்தில் ரியல் மாட்ரிட் வீரர் இஸ்கோ கோல் அடித்தார். இதற்கு பதிலடி தரும்விதமாக 78ஆவது நிமிடத்தில் மான்செஸ்டர் சிட்டி அணியின் முன்கள வீரர் கெப்ரியல் ஜீசஸ் ஹெட்டர் முறையில் சிறப்பான கோல் அடித்தார்.

Man city
கோல் அடித்த மகிழ்ச்சியில் மான்செஸ்டர் சிட்டி வீரர் ஜீசஸ்

இதைத்தொடர்ந்து, 83ஆவது நிமிடத்தில் மான்செஸ்டர் சிட்டி அணிக்கு பெனால்டி வழங்கப்பட்டது. அந்த அரிய வாய்ப்பை மான்செஸ்டர் சிட்டி அணியின் கேப்டன் கெவின் டி ப்ரூயின் லாவகமாக பயன்படுத்திகொண்டு கோலாக்கினார்.

இதன்பின், மான்செஸ்டர் சிட்டி அணி மீண்டும் அட்டாக்கிங் செய்ய தொடங்கியது. இதன் பலனாக, கெப்ரியல் ஜீசஸ் ரியல் மாட்ரிட் அணியின் தடுப்பாட்டத்தை கடந்து கோல் நோக்கி சென்றபோது, அவரை ரியல் மாட்ரிட் அணியின் கேப்டன் செர்ஜியோ ராமோஸ் கீழே தள்ளிவிட்டார்.

இதனால், நடுவர் ராமோஸுக்கு ரெட் வழங்கி ஆட்டத்திலிருந்து வெளியேற்றினார். இறுதியில் மான்செஸ்ட்ர் சிட்டி அணி 2-1 என்ற கோல் கணக்கில் ரியல் மாட்ரிட் அணியை அவர்களது சொந்த மண்ணில் வீழ்த்தியது.

இதைத்தொடர்ந்து, இவ்விரு அணிகளுக்கு இடையே மார்ச் 17ஆம் தேதி எதியாட் மைதானத்தில் இரண்டாவது நாக் அவுட் போட்டி நடைபெறவுள்ளது.

இந்த இரண்டு நாக் அவுட் போட்டிகளிலும் அதிக கோல், மற்றும் அவே கோல் கணக்கில் எந்த அணி முன்னிலை பெறுதோ அந்த அணி காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறும்.

இதேபோல், நடைபெற்ற மற்றொரு முதல் நாக் அவுட் போட்டியில் யுவென்டஸ் அணி 0-1 என்ற கோல் கணக்கில் லியான் அணியிடம் தோல்வியடைந்தது.

இதையும் படிங்க: ஐ.எஸ்.எல். அரையிறுதியில் கோவாவுடன் மோதும் சென்னை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.