ETV Bharat / sports

கரோனாவிலிருந்து மீண்ட லூயிஸ் சுவாரஸ்

உருகுவே: கரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருந்த கால்பந்து விளையாட்டின் முன்னணி வீரரான லூயிஸ் சுவாரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தார்.

Luis Suarez recovers from coronavirus
Luis Suarez recovers from coronavirus
author img

By

Published : Dec 4, 2020, 4:31 PM IST

உருகுவே கால்பந்து அணியின் நட்சத்திர வீரரான லூயிஸ் சுவாரஸ், லாலிகா கால்பந்து லீக் தொடரில் அத்லெடிகோ மாட்ரிட் அணிக்காக விளையாடிவந்தார். இந்நிலையில் கடந்த மாதம் 17ஆம் தேதி சுவாரஸ் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் அவர் கரோனா தொற்றிலிருந்து மீண்டு, தற்போது பயிற்சிக்குத் திரும்பவுள்ளதாகத் தகவல் வெளியானது. இத்தகவலை அத்லெடிகோ மாட்ரிட் அணியும் உறுதிசெய்துள்ளது.

இது குறித்து அத்லெடிகோ மாட்ரிட் வெளியிட்டுள்ள அறிக்கையில், “லாலிகாவின் அதிகாரப்பூர்வ பி.சி.ஆர். கரோனா கண்டறிதல் சோதனையில் லூயிஸ் சுவாரஸிற்குத் தொற்று இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து அவர் நாளைமுதல் மற்ற அணியினருடன் பயிற்சியில் ஈடுபடுவார்” என்று தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:ஆஸ்திரேலியாவிற்குப் பதிலடி தருமா இந்தியா? - டி-20 போட்டி இன்று தொடக்கம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.