ETV Bharat / sports

பிரீமியர் லீக்: சிறந்த வீரருக்கான விருதை வென்ற லிவர்பூல் கேப்டன்!

நடப்பு சீசனுக்கான இங்லீஷ் பிரீமியர் லீக் தொடரின் சிறந்த கால்பந்து வீரருக்கான விருதை லிவர்பூல் அணியின் கேப்டன் ஜோர்டன் ஹென்டர்சன் வென்றார்.

Liverpool skipper Henderson wins FWA Footballer of the Year award

author img

By

Published : Jul 25, 2020, 2:09 AM IST

1948ஆம் ஆண்டிலிருந்து இங்கிலாந்தில் நடைபெறும் இங்லீஷ் பிரீமியர் லீக் கால்பந்து தொடரின் ஒவ்வொரு சீசனின் இறுதியிலும் சிறந்த கால்பந்து வீரருக்கான விருது வழங்கப்படுவது வழக்கம்.

அந்த வகையில் 2019-20 சீசனின் சிறந்த கால்பந்து வீரருக்கான விருதை லிவர்பூல் அணியின் கேப்டன் ஜோர்டன் ஹென்டர்சன் பெற்றார். இதன் மூலம் இவ்விருதை வென்ற 12ஆவது லிவர்பூல் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

30 ஆண்டுகளுக்கு பிறகு லிவர்பூல் அணி இம்முறை பிரீமியர் லீக் பட்டத்தை வெல்ல ஜோர்டன் ஹென்டர்சன் முக்கிய காரணமாகத் திகழ்ந்தார். நடுகள வீரரான இவர், பிரீமியர் லீக் தொடரில் இதுவரை 360 போட்டிகளில் விளையாடி 46 அசிஸ்ட் செய்தது மட்டுமின்றி 30 கோல்களும் அடித்துள்ளார்.

அதில் 2011ஆம் ஆண்டிலிருந்து லிவர்பூல் அணிக்காக விளையாடி வரும் இவர் 269 போட்டிகளில் 26 கோல்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.