சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு சார்பில் நடத்தப்படும் ஃபிபா கிளப் உலகக் கோப்பைத் தொடரின் 16ஆவது சீசன் இந்தாண்டு கத்தாரில் நடைபெற்றது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கிளப் அணிகள் பங்கேற்றிருந்தன. இதனிடையே நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் இங்கிலாந்தின் லிவர்பூல் - ஜெர்மனியின் பிளமிங்கோ ஆகிய அணிகள் மோதின.
மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியின் இறுதி நிமிடம் வரை இரு அணியினரும் ஒரு கோல் கூட அடிக்காததால் இப்போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற கேள்வி எழுந்தது. பின்னர் கூடுதலாக ஒதுக்கப்பட்ட நேரத்தில் லிவர்பூல் அணி வீரர் ராபார்டோ ஃபிர்மினோ ஒரு கோல் அடித்தார். இதனால் இப்போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் பிளமிங்கோ அணியை வீழ்த்தி லிவர்பூல் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
லிவர்பூல் அணி முன்னதாக சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் மகுடம் சூடியது குறிப்பிடத்தக்கது.