ETV Bharat / sports

பார்சிலோனா அணியிலிருந்து விலகும் மெஸ்ஸி! - பார்சிலோனா கல்பந்து அணி

மாட்ரிட் : ஸ்பெயின் நாட்டின் நட்சத்திர கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி பார்சிலோனா அணியில் இருந்து விலகவுள்ளதாக அறிவித்துள்ளார்.

Lionel Messi to leave Barcelona
Lionel Messi to leave Barcelona
author img

By

Published : Aug 26, 2020, 10:29 AM IST

அர்ஜெண்ட்டினா கால்பந்து அணியின் கேப்டனான லியோனல் மெஸ்ஸி, கடந்த 20 ஆண்டுகளாக ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா கால்பந்து அணிக்காக விளையாடி வருகிறார். மெஸ்ஸி தலைமையில் நான்கு முறை பார்சிலோனா அணி சாம்பியன்ஸ் லீக் பட்டத்தை வென்றுள்ளது.

இருப்பினும், கடந்த ஆண்டு பார்சிலோனா அணியால் லா லீகா பட்டத்தை வெல்ல முடியவில்லை. மேலும், இப்போது நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் லீக் தொடரிலும், பேயர்ன் முனிச் அணியுடனான காலிறுதி போட்டியில் 8-2 என்ற கோல் கணக்கிலும் பார்சிலோனா அணி தோல்வியைத் தழுவியது. இந்தப் படுதோல்வி, மெஸ்ஸியை பெரிதும் பாதித்ததாக தகவல்கள் வெளியாகின.

மேலும், மெஸ்ஸி பார்சிலோனா அணியிலிருந்தும் வெளியேறவுள்ளதாகவும் தகவல் கசிந்தன. இந்தச் சூழலில், தன்னை பார்சிலோனா அணியில் இருந்து விடுவிக்கும்படி அணியின் நிர்வாகத்துக்கு மெஸ்ஸி தற்போது கடிதம் எழுதியுள்ளார். விரும்பும்போது அணியிலிருந்து விலக வீரர்களை அனுமதிக்கும் பிரிவைக் குறிப்பிட்டு, பார்சிலோனா நிர்வாகத்திற்கு இந்தக் கடித்தை மெஸ்ஸி எழுதியுள்ளார்.

Lionel Messi to leave Barcelona
மெஸ்ஸியின் சாதனைகள்

ஆனால், மெஸ்ஸி குறிப்பிடும் அந்தக் குறிப்பிட்ட ஒப்பந்தம் ஜூன் மாத்திலேயே காலாவாதியாகிவிட்டதாகவும், மெஸ்ஸி 2021ஆம் ஆண்டு வரை பார்சிலோனா அணிக்காக விளையாட வேண்டும் என்று அணியின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, சாம்பின்ஸ் லீக் தொடரில் அடைந்த படுதோல்வியைத் தொடர்ந்து பார்சிலோனாவின் பயிற்சியாளர் குயிக் செதியன், பொறுப்பேற்ற ஆறு மாதங்களுக்குள் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சாம்பியன்ஸ் லீக்: ஆறாவது முறையாக கோப்பையைக் கைப்பற்றி பேயர்ன் முனிச் சாதனை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.