ஸ்பெயின் நாட்டின் புகழ்பெற்ற கால்பந்து தொடரான லாலிகா தொடர் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இத்தொடரில் நேற்று (டிச. 29) நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பார்சிலோனா எஃப்சி அணி - ஈபார் எஃப்சி அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது.
பரப்பான இந்த ஆட்டத்தின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு கோலை அடித்து சமநிலையில் இருந்தன. இதனால் ஆட்டம் டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.
-
Partida encerrada: #BarçaEibar 1x1@fcbarcelona_br e @SDEibar dividem os pontos no Camp Nou!#LaLigaSantander pic.twitter.com/5CDIAeQYXz
— LaLiga (@LaLigaBRA) December 29, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Partida encerrada: #BarçaEibar 1x1@fcbarcelona_br e @SDEibar dividem os pontos no Camp Nou!#LaLigaSantander pic.twitter.com/5CDIAeQYXz
— LaLiga (@LaLigaBRA) December 29, 2020Partida encerrada: #BarçaEibar 1x1@fcbarcelona_br e @SDEibar dividem os pontos no Camp Nou!#LaLigaSantander pic.twitter.com/5CDIAeQYXz
— LaLiga (@LaLigaBRA) December 29, 2020
முன்னதாக பார்சிலோனா அணியின் கேப்டன் மெஸ்ஸி காயம் காரணமாக இப்போட்டியில் பங்கேற்கவில்லை. இதனால் மெஸ்ஸி இல்லாமல் பார்சிலோனா அணியால் போட்டியை வெல்ல முடியவில்லை என்ற கருத்து வைரலானது.
இதற்குப் பதிலளித்த அணியின் உரிமையாளர் ரொனால்ட் கோமன், “மெஸ்ஸி இல்லாமல் பார்சிலோனா சிறப்பாக விளையாடவில்லை என நீங்கள் கூற முடியாது. ஏனெனில் அவர் ஒரு சாம்பியன் வீரர்.
இருப்பினும் இப்போட்டியில் நாங்கள் நன்றாக விளையாடினோம். ஆனால் தனிப்பட்ட தவறுகள் காரணமாக எங்களால் வெற்றிபெற முடியவில்லை.
நாங்கள் வெல்ல தகுதியானவர்கள், ஈபார் அணிக்கெதிரான போட்டியில் நாங்கள் தேவையானதைச் செய்தோம். வெற்றிக்கான வாய்ப்புகளையும் உருவாக்கினோம்.
ஆனால் நாங்கள் எங்களுக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்தவில்லை. வெற்றிபெறும் அளவிற்கு எங்களது வீரர்கள் கடினமாக உழைத்தார்கள்” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:இந்தோனேஷியா மாஸ்டர்ஸ் முதல் 'I Retire' பதிவு வரை: 2020 பேட்மிண்டன் ஓர் பார்வை!