இந்தியன் சூப்பர் லீக் தொடரின் 6ஆவது சீசன் 14ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இந்த சீசனில் ஒடிசா எஃப்.சி. அணி 6ஆவது இடத்தில் தொடரை முடித்தது. இந்நிலையில் ஒடிசா அணியின் பயிற்சியாளராக இருந்த ஜோசப் கோம்பாவ், அணியிலிருந்து விலகியுள்ளார்.
இதுகுறித்து ஒடிசா எஃப்.சி. அணியின் தலைவர் ரோஹன் ஷர்மா பேசுகையில், ''சில நேரங்களில் கால்பந்தை விட வாழ்க்கை முக்கியமாகும். பயிற்சியாளர் ஜோசப் கோம்பாவ் மற்றும் அவரது குழுவினருக்கு நான் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன். பயிற்சியாளர் குழுவினர் எப்போதும் அணிக்கு நல்ல எண்ணங்களை அளிப்பார்கள். அணியை விட்டு விலகினாலும் ஒடிசா எப்போதும் அவருக்குச் சொந்த வீடு தான்'' என்றார்.
-
#ClubStatement 🔊📢📰#OdishaFC #AmaTeamAmaGame pic.twitter.com/79xGBwyQ7m
— Odisha FC (@OdishaFC) March 18, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#ClubStatement 🔊📢📰#OdishaFC #AmaTeamAmaGame pic.twitter.com/79xGBwyQ7m
— Odisha FC (@OdishaFC) March 18, 2020#ClubStatement 🔊📢📰#OdishaFC #AmaTeamAmaGame pic.twitter.com/79xGBwyQ7m
— Odisha FC (@OdishaFC) March 18, 2020
அணியைவிட்டு விலகுவது பற்றி பயிற்சியாளர் கோம்பாவ் பேசுகையில், ''இந்த முடிவினை எடுக்க மிகவும் கடினமாக இருந்தது. ஒடிசாவில் செலவிட்ட ஒவ்வொரு நிமிடத்திலும் மகிழ்ச்சியாக இருந்தேன். எங்கள் அணியில் நான் செய்த மாற்றங்கள் நினைத்துப் பெருமையாக உள்ளது. ஆனால் அணியைக் கட்டமைக்கும் வேலையில் பாதியோடு விலகுவது கடினமாக உள்ளது. எங்கிருந்தாலும் ஒடிசா அணியின் வெற்றிக்கு எப்போதும் உதவுவேன்'' என்றார்.
டெல்லி டைனமோஸ் அணியின் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து விலகி 2018ஆம் ஆண்டு ஒடிசா அணியில் ஜோசப் இணைந்தார். இவரின் செயல்பாடுகள் அணி நிர்வாகத்திற்குப் பிடித்ததால், 2019ஆம் ஆண்டும் ஒடிசா அணியோடு ஜோசப் பயணித்தார்.
இதையும் படிங்க: ஐஎஸ்எல்: ஏடிகேவின் வெற்றியில் இந்திய வீரர்களின் பங்கு!