ஐஎஸ்எல் தொடரின் நேற்று நடந்த ஆட்டத்தில் ஹைதராபாத் அணியை எதிர்த்து ஜாம்ஷெத்பூர் அணி ஆடியது. ஹைதராபாத் அணி அதன் சொந்த மண்ணில் ஆடும் கடைசி போட்டி என்பதால் வெற்றியுடன் தொடரை முடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
முதல் பாதி ஆட்டத்தின் தொடங்கி நான்காவது நிமிடத்திலேயே ஹைதராபாத் அணிக்கு கோல் அடிப்பதற்குக் கிடைத்த வாய்ப்பை வீணடித்தது. இதையடுத்து இரு அணிகளும் கோல் அடிக்க தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டன. ஹைதராபாத் அணியின் முன்னணி வீரர் டேவிசனுக்கு கிடைத்த இரண்டு வாய்ப்புகளை வீணடித்தார். அதையடுத்து 39ஆவது நிமிடத்தில் அந்த அணியின் நெஸ்டர் முதல் கோல் அடித்து ஹைதராபாத் அணிக்கு முன்னிலை ஏற்படுத்தினார். முதல் பாதி ஆட்டத்தின் முடிவில் ஹைதராபாத் அணி 1-0 என முன்னிலை வகித்தது.
-
📽 | A @07_nestor thunderbolt and @passi_sumeet's deft touch defined the outcome of #HFCJFC 💪
— Indian Super League (@IndSuperLeague) February 13, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
Take a look at both the goals here!#HeroISL #LetsFootball pic.twitter.com/e5VWoDcjxL
">📽 | A @07_nestor thunderbolt and @passi_sumeet's deft touch defined the outcome of #HFCJFC 💪
— Indian Super League (@IndSuperLeague) February 13, 2020
Take a look at both the goals here!#HeroISL #LetsFootball pic.twitter.com/e5VWoDcjxL📽 | A @07_nestor thunderbolt and @passi_sumeet's deft touch defined the outcome of #HFCJFC 💪
— Indian Super League (@IndSuperLeague) February 13, 2020
Take a look at both the goals here!#HeroISL #LetsFootball pic.twitter.com/e5VWoDcjxL
பின்னர் தொடங்கிய இரண்டாம் பாதியில் ஆட்டம் பரபரப்பானது. இரண்டாம் பாதி ஆட்டத்தில் ஜாம்ஷெத்பூர் அணியின் செர்ஜியோ கொடுத்த பாஸை நோ ரிவெரா கோல் போஸ்ட்டை நோக்கி அடிக்க, அது ஹைதராபாத் அணியின் கோல்கீப்பர் லக்ஷ்மிகாந்தால் தடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஜாம்ஷெத்பூர் அணி கோல் அடிக்க வேண்டும் என்ற கட்டாயத்தால், ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஆனால் இரண்டாம் பாதி இறுதிவரை கோல் எதுவும் அடிக்கவில்லை. இதையடுத்து ஆறு நிமிடங்கள் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது.
அந்தக் கூடுதல் நேரத்தின் மூன்றாவது நிமிடத்தில் ஜாம்ஷெத்பூர் அணியின் நோ அகோஸ்டாவிற்குக் கிடைத்த ப்ரீ கிக் வாய்ப்பைப் பயன்படுத்தி சுமித் கோல் அடித்து அசத்தினார். இதனால் ஆட்டம் 1-1 என டிராவில் முடிந்தது.
இதனால் புள்ளிப்பட்டியலில் ஜாம்ஷெத்பூர் அணி 18 புள்ளிகளுடன் ஏழாவது இடத்திலும் ஹைதராபாத் அணி ஏழு புள்ளிகளுடன் பத்தாவது நிமிடத்திலும் உள்ளனர்.
இதையும் படிங்க: மனைவியை விவாகாரத்து செய்த ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன்