ETV Bharat / sports

சென்னையின் எஃப்.சி. போட்டி தேதியில் மாற்றம் - Chennaiyin FC

ஐ.எஸ்.எல்.கால்பந்து தொடரில் சென்னையின் எஃப்.சி - ஜாம்ஷெட்பூர் எஃப்.சி. அணிகளுக்கிடையேயான போட்டி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

chennaiyin fc
author img

By

Published : Nov 19, 2019, 6:46 PM IST

இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரின் ஆறாவது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றுவந்த இந்தத் தொடரில் தற்போது சிறிய இடைவேளை அளிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை ஐ.எஸ்.எல். தொடரில் உள்ள பத்து அணிகளும் தலா நான்கு போட்டிகளில் விளையாடியுள்ளன.

இதில் கொல்கத்தா அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அதற்கடுத்த இடங்களில் கோவா, நார்த் ஈஸ்ட் யுனைடெட், ஜாம்ஷெட்பூர் ஆகிய அணிகளும், நடப்பு சாம்பியனான பெங்களூரு எஃப்.சி அணி ஐந்தாவது இடத்திலும் உள்ளன. ஆனால் இரண்டு முறை சாம்பியன் மகுடத்தை சூடிய சென்னையின் எஃப்.சி. அணி கடந்த சீசனைப் போலவே இம்முறையும் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் அந்த அணி மூன்று தோல்வி, ஒரு டிரா என ஒரு புள்ளியுடன் கடைசி இடத்தில் உள்ளது.

இதனிடையே மீண்டும் ஐ.எஸ்.எல் போட்டிகள் வரும் சனிக்கிழமை முதல் தொடங்குகிறது. இதில் சென்னையின் எஃப்.சி. அணி - ஜாம்ஷெட்பூர் எஃப்.சி. அணிகளுக்கிடையேயான போட்டி டிசம்பர் 6ஆம் தேதி ஜார்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் உள்ள ஜே.ஆர்.டி. டாடா மைதானத்தில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இந்தச் சூழலில் ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைக்கான தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு வரும் டிசம்பர் 7ஆம் தேதி நடைபெறுகிது.

இதனால் ஜாம்ஷெட்பூர் எஃப்.சி - சென்னையின் எஃப்.சி. அணிகளுக்கிடையேயான போட்டியின் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி டிசம்பர் ஆறாம் தேதிக்கு பதிலாக டிசம்பர் ஒன்பதாம் தேதி போட்டி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Intro:Body:

Jamshedpur, Nov 19 (IANS) Indian Super League fixture of Jamshedpur FC and Chennaiyin FC has been moved to December 9, a statement said.

The match was originally scheduled for December 6 at the JRD Tata Sports Complex here.

"The rescheduling is done in conjunction with the city authorities and administration in view of the Jharkhand State Assembly Phase 2 polling on December 7," the statement said.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.