இந்தியன் சூப்பர் லீக் என்றழைக்கப்படும் உள்ளூர் கால்பந்து தொடரில் இந்த சீசனின் கடைசி லீக் ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் சென்னையின் எஃப்சி அணி, நார்த் ஈஸ்ட் யுனைடட் அணியை எதிர்த்து விளையாடியது.
விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் அதிரடி காட்டிய சென்னை அணியின் மாஸி சைகானி (masih saighnani) ஆட்டத்தின் 17’ஆவது நிமிடத்தில் கோலடித்து அணியின் கோல் கணக்கைத் தொடங்கிவைத்தார். இதற்குப் பதிலடி கொடுக்கும்விதத்தில் நார்த் ஈஸ்ட் அணியின் மார்டின் ஷாவ்ஸ் ஆட்டத்தின் 43’ஆவது நிமிடத்தில் கோலடித்து அசத்தினார்.
இதன்மூலம் முதல் பாதி ஆட்டநேர முடிவில் சென்னையின் எஃப்சி அணி 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் நீடித்தன. அதனையடுத்து தொடங்கிய இரண்டாவது பாதி ஆட்டத்தின் 71’ஆவது நிமிடத்தில் நார்த் ஈஸ்ட் அணியின் மார்டின் மீண்டும் கோலடித்து சென்னை அணிக்கு அதிர்ச்சியளித்தார்.
இதனைத் தொடர்ந்து தோல்வியைத் தவிர்க்கப் போராடிய சென்னை அணியால் இறுதிவரை கோலடிக்க இயலவில்லை. ஆனால் அதன்பின் வழங்கப்பட்ட கூடுதல் நேரமான 90+3ஆவது நிமிடத்தில் சென்னையின் லாலியன்ஸுவாலா சாங்தே (lallianzuala chhangte) கோலடித்து அசத்த, ஆட்டத்தின்போக்கு திசைமாறியது.
-
A brace, a red card and a stoppage-time equaliser 🙌
— Indian Super League (@IndSuperLeague) February 25, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
Here's our #ISLRecap of the last league match of #HeroISL 2019-20 📺
Full-match highlights 👉 https://t.co/DQ2eibsRQK#NEUCFC #LetsFootball pic.twitter.com/kDHac7f54N
">A brace, a red card and a stoppage-time equaliser 🙌
— Indian Super League (@IndSuperLeague) February 25, 2020
Here's our #ISLRecap of the last league match of #HeroISL 2019-20 📺
Full-match highlights 👉 https://t.co/DQ2eibsRQK#NEUCFC #LetsFootball pic.twitter.com/kDHac7f54NA brace, a red card and a stoppage-time equaliser 🙌
— Indian Super League (@IndSuperLeague) February 25, 2020
Here's our #ISLRecap of the last league match of #HeroISL 2019-20 📺
Full-match highlights 👉 https://t.co/DQ2eibsRQK#NEUCFC #LetsFootball pic.twitter.com/kDHac7f54N
ஆட்டநேர முடிவில் சென்னையின் எஃப்சி அணி 2-2 என்ற கோல்கணக்கு அடிப்படையில் நார்த் ஈஸ்ட் அணியுடனான போட்டியை டிராவில் முடித்தது. இந்த சீசனுக்கான ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் சென்னையின் எஃப்சி அணி ஏற்கனவே அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஓய்விலும் சேட்டைக்கு ஓய்வளிக்காத சாஹல் - இந்த முறை நாகினி டான்ஸ்