ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் இன்று (ஜன. 05) நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மும்பை சிட்டி எஃப்சி அணி - பெங்களூரு எஃப்சி அணியை எதிர்கொண்டது. பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியின் ஆரம்பத்திலேயே மும்பை அணி தனது கோல் வேட்டையைத் தொடங்கியது.
மும்பை அணிக்கு ஆட்டத்தின் 9ஆவது நிமிடத்தில் மொர்டடாவும், ஆட்டத்தின் 15ஆவது நிமிடத்தில் பிபின் சிங்கும் கோலடித்தனர். இதன்மூலம் முதல் பாதி ஆட்டத்தில் மும்பை சிட்டி எஃப்சி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.
இதைத்தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் பாதி ஆட்டத்தில் சிறப்பாகச் செயல்பட்ட பெங்களூரு அணிக்கு 79ஆவது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதனைச் சரியாகப் பயன்படுத்திய சுனில் சேத்ரி கோலடித்து அணிக்கு ஆறுதலளித்தார்.
பின்னர் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய மும்பை சிட்டி அணிக்கு ஆட்டத்தின் 84ஆவது நிமிடத்தில் ஒபேச்சே கோலடித்து அணியின் வெற்றியை உறுதிசெய்தார்.
-
A dominating show from #TheIslanders to seal 3️⃣ crucial points against Bengaluru FC at the Fatorda Stadium! 💙👌#BFCMCFC #AamchiCity🔵 pic.twitter.com/DC3aeXFdM3
— Mumbai City FC (@MumbaiCityFC) January 5, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">A dominating show from #TheIslanders to seal 3️⃣ crucial points against Bengaluru FC at the Fatorda Stadium! 💙👌#BFCMCFC #AamchiCity🔵 pic.twitter.com/DC3aeXFdM3
— Mumbai City FC (@MumbaiCityFC) January 5, 2021A dominating show from #TheIslanders to seal 3️⃣ crucial points against Bengaluru FC at the Fatorda Stadium! 💙👌#BFCMCFC #AamchiCity🔵 pic.twitter.com/DC3aeXFdM3
— Mumbai City FC (@MumbaiCityFC) January 5, 2021
இதனால் ஆட்டநேர முடிவில் மும்பை சிட்டி எஃப்சி அணி 3-1 என்ற கோல் கணக்கில் பெங்களூரு எஃப்சி அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஐஎஸ்எல் புள்ளிப்பட்டியலில் 22 புள்ளிகளைப் பெற்று மும்பை சிட்டி எஃப்சி அணி முதலிடத்திற்கும் முன்னேறியது.
இதையும் படிங்க: சிட்னி டெஸ்டிற்கு தயாராகும் ‘ஹிட்மேன்’ ரோஹித்!