ஐஎஸ்எல் கால்பந்து திருவிழா தற்போது இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டது. இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பெங்களூரு எஃப்சி அணி - எஃப்சி கோவா அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது.
இப்போட்டியின் ஆரம்பத்திலேயே அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய கோவா அணிக்கு இகோர் அங்குலோ ஆட்டத்தின் 20ஆவது நிமிடத்திலும், ரிதீம் ட்லாங் 23ஆவது நிமிடத்திலும் அடுத்தடுத்த கோல்களை அடித்து அணியை முன்னிலைப்படுத்தினர்.
பின்னர் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பெங்களூரு எஃப்சி அணியின் சுரேஷ் சிங் ஆட்டத்தின் 33ஆவது நிமிடத்தில் கோலடித்தார். இதனால் முதல் பாதி ஆட்டத்தில் எஃப்சி கோவா அணி 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.
இதையடுத்து நடைபெற்ற இரண்டாம் பாதி ஆட்டத்தில் தனது டிஃபென்ஸ் பிரிவை வலிமைப்படுத்திய கோவா அணி எதிரணியின் கோலடிகும் முயற்சிகளை தகர்த்தது. இதன் மூலம் ஆட்டநேர முடிவில் எஃப்சி கோவா அணி 2-1 என்ற கோல் கணக்கில் பெங்களூரு எஃப்சி அணியை வீழ்த்தியது.
-
FULL-TIME | #BFCFCG
— Indian Super League (@IndSuperLeague) February 21, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
CRUCIAL WIN for @FCGoaOfficial 👏#HeroISL #LetsFootball pic.twitter.com/TVNE5vgMux
">FULL-TIME | #BFCFCG
— Indian Super League (@IndSuperLeague) February 21, 2021
CRUCIAL WIN for @FCGoaOfficial 👏#HeroISL #LetsFootball pic.twitter.com/TVNE5vgMuxFULL-TIME | #BFCFCG
— Indian Super League (@IndSuperLeague) February 21, 2021
CRUCIAL WIN for @FCGoaOfficial 👏#HeroISL #LetsFootball pic.twitter.com/TVNE5vgMux
இத்தோல்வியினால் பெங்களூரு எஃப்சி அணி ஐஎஸ்எல் புள்ளிப்பட்டியலில் 22 புள்ளிகளை மட்டும் பெற்று பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பைத் தவறவிட்டது.
இதையும் படிங்க: ‘லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்திருக்கேன்’ - வைரலாகும் ராபின் உத்தப்பாவின் காணொலி!