கரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் நடைபெற்று வரும் ஐஎஸ்எல் ஏழாவது சீசன் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. நேற்று (ஜன.30) நடைபெற்ற லீக் ஆட்டத்தில் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் மும்பை சிட்டி எஃப்சி அணி, ஐந்தாமிடத்தில் இருக்கும் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியை எதிர்கொண்டது.
பெரும் எதிர்பார்ப்புடன் தொடங்கிய இப்போட்டியின் ஆரம்பம் முதலே நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி, எதிரணிக்கு அதிர்ச்சியளித்தது. அந்த அணியின் டெசுன் பிரவுன் (Deshorn Brown) ஆட்டத்தின் 6 மற்றும் 10 ஆவது நிமிடத்தில் அடுத்தடுத்த கோல்களை அடித்து அணியை முன்னிலைப் படுத்தினார்.
இதனால் முதல் பாதி ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது. தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் பாதி ஆட்டத்தில் தோல்வியை தவிர்க்க போராடிய மும்பை சிட்டி எஃப்சி அணிக்கு, ஆடம் லெ ஃபான்டிரே ஆட்டத்தின் 85ஆவது நிமிடத்தில் கோலடித்து ஆறுதலளித்தார்.
-
FULL TIME!
— NorthEast United FC (@NEUtdFC) January 30, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
DOUBLE OVER THE LEAGUE LEADERS! 🔥
The Highlanders return to the 🔝4⃣ with that inspirational win. 🔴⚪#MCFCNEU #StrongerAsOne pic.twitter.com/GmDGGRiOHK
">FULL TIME!
— NorthEast United FC (@NEUtdFC) January 30, 2021
DOUBLE OVER THE LEAGUE LEADERS! 🔥
The Highlanders return to the 🔝4⃣ with that inspirational win. 🔴⚪#MCFCNEU #StrongerAsOne pic.twitter.com/GmDGGRiOHKFULL TIME!
— NorthEast United FC (@NEUtdFC) January 30, 2021
DOUBLE OVER THE LEAGUE LEADERS! 🔥
The Highlanders return to the 🔝4⃣ with that inspirational win. 🔴⚪#MCFCNEU #StrongerAsOne pic.twitter.com/GmDGGRiOHK
பின்னர் எதிரணியின் வலிமையான டிஃபென்ஸைத் தாண்டி மும்பை சிட்டி அணியால் கோலடிக்க முடியவில்லை. இதன் மூலம் ஆட்ட நேர முடிவில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி 2-1 என்ற கோல் கணக்கில் மும்பை சிட்டி எஃப்சி அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
இதையும் படிங்க: ‘இந்த வெற்றி மிகவும் அவசியமானது’ - பாபர் அசாம்