ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் ஏழாவது சீசன் கோலாகமாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மும்பை சிட்டி எஃப்சி அணி - ஒடிசா எஃப்சி அணியை எதிர்கொண்டது.
மிகுந்த எதிர்பார்ப்புடன் தொடங்கிய இப்போட்டியில் இரு அணி வீரர்களும் கோலடிக்க முயற்சித்தனர். இதில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய மும்பை சிட்டி அணியின் ஒபேச்சே ஆட்டத்தின் 30ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை சரியாக பயன்படுத்து கோலடித்தார்.
அவரைத் தொடர்ந்து ஆட்டத்தின் 45ஆவது நிமிடத்தில் ரோலின் கோலடித்து அணியை முன்னிலைப் படுத்தினார். இதன் மூலம் முதல் பாதி ஆட்டநேர முடிவில் மும்பை சிட்டி எஃப்சி அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலைப் பெற்றது.
இதைத்தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் பாதி ஆட்டத்தில் மும்பை அணியின் கடுமையான டிஃபென்ஸைத் தாண்டி ஒடிசா அணி வீரர்களால் கோலடிக்க முடியாமல் திணறினர். இதனால் ஆட்டநேர முடிவு வரை ஒடிசா அணியால் ஒரு கோலைக் கூட அடிக்கமுடியவில்லை.
-
3️⃣ wins on the trot for #TheIslanders after a clinical performance against Odisha FC! 💪#MCFCOFC #HeroISL #AamchiCity 🔵 pic.twitter.com/jFuG6imFLC
— Mumbai City FC (@MumbaiCityFC) December 6, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">3️⃣ wins on the trot for #TheIslanders after a clinical performance against Odisha FC! 💪#MCFCOFC #HeroISL #AamchiCity 🔵 pic.twitter.com/jFuG6imFLC
— Mumbai City FC (@MumbaiCityFC) December 6, 20203️⃣ wins on the trot for #TheIslanders after a clinical performance against Odisha FC! 💪#MCFCOFC #HeroISL #AamchiCity 🔵 pic.twitter.com/jFuG6imFLC
— Mumbai City FC (@MumbaiCityFC) December 6, 2020
இதன் மூலம் மும்பை சிட்டி எஃப்சி அணி 2-0 என்ற கோல் கணக்கில் ஒடிசா எஃப்சி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் மும்பை சிட்டி எஃப்சி அணி 9 புள்ளிகளுடன் ஐஎஸ்எல் புள்ளிப்பட்டியலின் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
இதையும் படிங்க:டிம் சௌதி, வாக்னர் பந்துவீச்சில் வீழ்ந்தது வெஸ்ட் இண்டீஸ்: நியூ., இன்னிங்ஸ் வெற்றி!