ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் ஏழாவது சீசன் கோலாகலமாக நடைபெற்றுவருகிறது.
இதில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஹைதராபாத் எஃப்சி அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஒடிசா எஃப்சியை வீழ்த்தி, இந்த சீசனை வெற்றியுடன் தொடங்கியுள்ளது.
இந்நிலையில் இன்று நடைபெறும் ஐந்தாவது லீக் போட்டியில் சென்னையின் எஃப்சி அணி - ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. வாஸ்கோவிலுள்ள திலக் மைதன் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.
சென்னையின் எஃப்சி:
ஐஎஸ்எல் தொடர் வரலாற்றில் சென்னையின் எஃப்சி அணி இரண்டு முறை கோப்பையை வென்றுள்ளது. மேலும் கடந்த ஐஎஸ்எல் சீசனில் சென்னையின் எஃப்சி அணி இறுதிப்போட்டி வரை முன்னேறி, நூலிழையில் கோப்பையை தவறவிட்டிருந்தது.
-
Let’s get this going! 🔥
— Chennaiyin FC 🏆🏆 (@ChennaiyinFC) November 24, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
நல்லதொரு ஆரம்பம் அமையட்டம்! 💙 #AllInForChennaiyin #JFCCFC pic.twitter.com/tLf4E84jRm
">Let’s get this going! 🔥
— Chennaiyin FC 🏆🏆 (@ChennaiyinFC) November 24, 2020
நல்லதொரு ஆரம்பம் அமையட்டம்! 💙 #AllInForChennaiyin #JFCCFC pic.twitter.com/tLf4E84jRmLet’s get this going! 🔥
— Chennaiyin FC 🏆🏆 (@ChennaiyinFC) November 24, 2020
நல்லதொரு ஆரம்பம் அமையட்டம்! 💙 #AllInForChennaiyin #JFCCFC pic.twitter.com/tLf4E84jRm
இதனால் இந்த சீசனில் கோப்பையை வெல்லும் முனைப்போடு சென்னை அணி செயல்படும் என்பதால், இன்றைய ஆட்டத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
ஜாம்ஷெட்பூர் எஃப்சி:
2019-20 ஆம் ஆண்டிற்கான சீசனில் ஜாம்ஷெட்பூர் அணி மோசமான தோல்விகளைச் சந்தித்து புள்ளிப்பட்டியலின் எட்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டது. இதனால் நடப்பு சீசனில் ஜாம்ஷெட்பூர் அணி பெரும் மாற்றங்களை கொண்டுவந்துள்ளது.
-
Set your alarm clocks!⏰
— Jamshedpur FC (@JamshedpurFC) November 24, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
You don't want to miss out on our first clash of the season, do you? @jackichand10 #JamKeKhelo #JFCCFC pic.twitter.com/nxVwvlcLaq
">Set your alarm clocks!⏰
— Jamshedpur FC (@JamshedpurFC) November 24, 2020
You don't want to miss out on our first clash of the season, do you? @jackichand10 #JamKeKhelo #JFCCFC pic.twitter.com/nxVwvlcLaqSet your alarm clocks!⏰
— Jamshedpur FC (@JamshedpurFC) November 24, 2020
You don't want to miss out on our first clash of the season, do you? @jackichand10 #JamKeKhelo #JFCCFC pic.twitter.com/nxVwvlcLaq
அதிலும் குறிப்பாக கடந்த சீசனில் அதிக கோல்களை எடுத்த சென்னை அணியின் வால்ஸ்கீஸை ஜாம்ஷெட்பூர் அணி தன்வசம் இழுத்துள்ளது. இதனால் இன்றைய போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க:ஹைதராபாத் எஃப்சி அணியை வழிநடத்துகிறார் அதில் கான்!